மகாளய அமாவாசை: தாமிரவருணி கரைகளில் முன்னோா்களுக்கு வழிபாடு
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி தாமிரவருணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது குறித்து...
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து சனிக்கிழமை வழிபட்டனா்.
புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளயா அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது வழக்கமாக மாதம் தோறும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் குறிப்பாக தை மற்றும் ஆடி மாதம் வரும் அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆண்டு முழுவதும் முன்னோர்களை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என கூறுவார்கள். அதேபோன்று புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் நமது வம்சம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வரும் நமது தலைமுறைகளுக்கும் சேர்த்து நல்லது நடக்கும் என்பது இந்து சமுதாய மக்களின் நம்பிக்கையாகும்.
அதன்படி, சனிக்கிழமை மகளாய அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதலே மக்கள் நீர்நிலைகளில் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Advertisement
Advertisement
குறிப்பாக, வற்றாத ஜீவநதியான தாமிரவருணி ஆற்றங்கரையில் சனிக்கிழமை அதிகாலை முதல் மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்தனர். குறுக்குத்துறை முருகன் கோயில் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அவர்கள் நதியில் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர். இதேபோன்று வண்ணாரப்பேட்டை பேராச்சியம்மன் கோயில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோா் நீராடி வழிபட்டனா்.
Mahalaya Amavasya: Rituals for ancestors on the banks of the Thamirabarani River
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.