FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிகாரில் எம்எல்ஏ-வின் உறவினர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பிகாரில் எம்எல்ஏ-வின் உறவினர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி....

16 அக்டோபர் 2026, 6:41 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

பிகாரில் எம்எல்ஏ-வின் உறவினர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், மதேபுரா மாவட்டத்தில், ஆர்ஜேடி எம்எல்ஏ சந்திரசேகர் யாதவின் உறவினரும், 25 வயதுடைய பிஎச்டி ஆய்வாளருமான ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர், இனார்வா கிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக, துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் சிங் தெரிவித்தார். கோர்ஹியாரி செங்கல் சூளைக்கு அருகில், இருசக்கர வாகனத்தில் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ரஞ்சனின் முதுகில் சுடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அஜய் குமார் சிங் மேலும் தெரிவித்தார். ரஞ்சனிடமிருந்து கைப்பேசியைப் பறிக்க முயன்றபோது மர்ம நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றதாக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சந்திரசேகர் யாதவ் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

summary

A 25-year-old PhD scholar, a cousin of RJD MLA Chandrashekhar Yadav, was shot dead allegedly by motorcycle-borne assailants in Bihar's Madhepura district on Friday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments