FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெற்றோருக்கு தீபாவளி பரிசாக ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் யோசனையா?

பெற்றோருக்கு தீபாவளி பரிசாக ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் யோசனை பற்றி..

ஸ்மார்ட்வாட்ச் - file photo
பகிர்:

தீபாவளி என்றாலே இனிப்பு, மகிழ்ச்சி, பட்டாசு, பரிசுகள் நிறைந்ததாக இருக்கும், என்ன இனிப்பு செய்யலாம், வாங்கலாம் என சிலர் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, பலரும் என்னென்ன பரிசுகள் வாங்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்.

பெற்றோருக்கு ஸ்மார்ட் வாட்ச் வாங்கிக் கொடுக்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது நல்ல யோசனையாக இருக்கும் என்றே சொல்லலாம்.

ஒருபக்கம், எப்போதும் கையில் செல்போன் வைத்திருக்க வண்டிய அவசியமில்லை என்பதுடன், உறங்கும்போதும் நடக்கும்போதும் அவர்களது இதயத் துடிப்பையும் அறிந்துகொள்ள வழிவகை பிறக்கும்.

Advertisement

Advertisement

ஆனால், ஸ்மார்ட் வாட்சில் வரும் தகவல்களைப் படிக்க முடியாமல் பெற்றோர் சிரமப்படலாம். எனவே, பெற்றோருக்கு என வாங்கும்போது சில விவரங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக முதல்முறை ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவோருக்கு என சில அடிப்படைகள் இருக்கின்றன.

ரெட்டிமி வாட்ச் 5 ஆக்டிவ்

முதல்முறை பயன்படுத்துவோருக்கு ரெட்டிமி வாட்ச் 5 ஆக்டிவ் சிறந்த தெரிவு. இதன் விலை ரூ.4599 ஆக உள்ளது. மிகப் பெரிய 2 அங்குல டிஸ்ப்ளே இருப்பதால், நேரம், எத்தனை நடை நடக்கிறோம், அழைப்பவரின் பெயரை கூட எளிதாகப் படிக்க முடியும்.

புளூடூத் மூலம் அழைப்பது, தொலைபேசி மற்றொரு அறையில் இருக்கும்போது, ​​பெற்றோர்கள் மணிக்கட்டில் கட்டியிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மூலமே அழைப்புகளுக்குப் பதிலளிக்க முடியும்.

இதன் பேட்டரி 18 நாள்கள் வரை நீடிக்கும், எனவே மறந்துவிட்டாலும்கூட பிரச்னை இல்லை. இதுவரை வாங்கியவர்களும் நல்ல கருத்துகளை பதிவிட்டிருப்பதாக இ-வணிக தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் அமேஸ்ஃபிட் பிப் மாக்ஸ்

இந்த ஸ்மார்ட் வாட்ச் மிகப்பெரிய திரையைக் கொண்டுள்ளது; இதில் 2.07 அங்குல AMOLED திரை உள்ளது. இது மிகவும் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருப்பதால், காலை நடைப்பயிற்சியின் போது வெளிப்புறச் சூழலிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.

இதன் பேட்டரி சாதாரண பயன்பாட்டில் 20 நாள்கள் வரை நீடிக்கும். சார்ஜ் செய்ய மறந்துவிடும் அல்லது அதிக ஞாபக மறதி இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதில் நடைப்பயிற்சிக்கான உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதி உள்ளது. விலை சற்று கூடுதல்தான், இதன் விலை ரூ. 10,999 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7எல்டிஇ

உங்கள் பெற்றோர் சாம்சங் ஃபோனைப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், பட்ஜெட் பொருட்டில்லை என்றாலும் சாம்சங் கேலக்ஸி வாட்ச்7 LTE ஒரு சிறந்த தெரிவு.

இந்த LTE பதிப்பில், ஃபோன் வீட்டில் விடப்பட்டிருந்தாலும், அழைப்புகளை மேற்கொள்ளவும் பெறவும் முடியும். இது இதயத் துடிப்பைக் கண்காணிப்பதுடன், கேலக்ஸி ஃபோன்களில் உள்ள சாம்சங் ஹெல்த் மானிட்டர் மூலம் இசிஜி மற்றும் இரத்த அழுத்தத்தையும் கண்காணிக்கும். இதன் விலை ரூ. 18,950 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments