எப்படி தெரிவு செய்ய வேண்டும் வாக்யூம் க்ளீனர்களை? சின்ன டிப்ஸ்
எப்படி தெரிவு செய்ய வேண்டும் வாக்யூம் க்ளீனர்களை என்பது குறித்த சின்ன சின்ன டிப்ஸ்
வீட்டுக்கு அல்லது கார் சுத்தம் செய்ய வாக்யூம் க்ளீனர்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், அதனை எவ்வாறு தெரிவு செய்து வாங்க வேண்டும் என்று குழப்பத்தில் இருந்தால்..
இணையதளங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் வாக்யூம் க்ளீனர்களின் வகைகளை முதலில் பார்க்க வேண்டும்.
பிறகு, அதன் விலை, தரம், வேலை செய்யும் விதம், வடிவமைப்பு, சுத்தம் செய்வது எளிதா, அது பயன்படுத்த எளிதானதா என்பதையெல்லாம் ஆராயலாம்.
Advertisement
Advertisement
தற்போது வாக்யூம் க்ளீனர்கள் பிரத்யேகமான கார் கிளீனர்கள், கம்பியற்ற கையடக்க மாடல்கள் மற்றும் '2-இன்-1' ஸ்டிக் வேக்யூம் கிளீனர்கள் போன்றவை வந்துள்ளன. தற்போதைய சந்தை நிலவரப்படி, ரூ. 4,000-க்கும் குறைவான விலையில் கையடக்க மற்றும் சிறிய அளவிலான 'பேக்லெஸ்' (bagless) மாடல்கள் பரவலாகக் கிடைக்கின்றன.
குப்பைகளை வெளியேற்றும் முறைதான் இதில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் கையடக்க வாக்யூம் க்ளீனர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது, அவற்றை பயன்படுத்தும் முறை எளிதாக இருந்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்.
அனைத்து வழிகாட்டுதல்களையும் தனித்தனியா படித்துப் பார்க்கவும். சில இயந்திரங்கள் அடிக்கடி குப்பைகளை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவை வேலையை இரட்டிப்பாக்கலாம்.
குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக வாங்கும் வாக்யூம் க்ளீனர்களை வேறொரு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. எனவே காருக்கென வாங்கினால் அங்கு மட்டும்தான் பயன்படுத்துவதாக இருந்தால் வாங்கலாம்.
மின்சாரத்தில் இயங்கும் வாக்யூம் க்ளீனர்களை வாங்கினால் சில இடங்களில் பயன்படுத்த முடியாது. ஆனால், பேட்டரியில் இயங்குவது அதிக நேரம் பயன்படுத்த முடியாததாக இருக்கக் கூடாது.
சில வாக்யூம் க்ளீனர்களுடன் வரும் இணைப்புகளையும் கருத்தில் கொள்வது நல்லது. வெறும் தூசு எடுப்பது மட்டுமல்லாமல் ஜன்னல், திரைகளை துடைக்கும் சிறப்பு இணைப்புகள் அதிகம் இருப்பதையும் பார்த்து வாங்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.