செய்திகள்

நீங்க குரல் கொடுத்தா போதும், இந்த மெஷின் தானே காஃபி போட்டுத் தருமாம்!

உங்கள் மொபைலில் இந்த ஸ்மார்ட் காஃபி மேக்கரை இணைத்து விட்டால் போதும். மொபைல் மூலமாக இதைக் கண்ட்ரோல் செய்யலாம். அதாவது சூட்டைக் கூட்டி, குறைக்கச் சொல்லி ஆணையிடலாம்.

RKV

இந்த காஃபி மேக்கரைப் பாருங்க, ஹோம் அப்ளையன்யஸ் மார்கெட்டில் இது புதுசு. இன்னும் தமிழக வீடுகளை இது பரவலாக அலங்கரிக்கத் தொடங்கவில்லை. ஆனால், இதை சரியாக உபயோகப்படுத்தி பார்த்து விட்டார்கள் என்றால் நம் இல்லத்தரசிகள் இதை அப்படியே ஆசையாக ஸ்வீகரித்துக் கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால்? இந்த காஃபி மேக்கரில் பாலையும், காஃபி பொடியையும் போட்டு விட்டு பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கத் தேவை இல்லை. உங்கள் மொபைலில் இந்த ஸ்மார்ட் காஃபி மேக்கரை இணைத்து விட்டால் போதும். மொபைல் மூலமாக இதைக் கண்ட்ரோல் செய்யலாம். அதாவது சூட்டைக் கூட்டி, குறைக்கச் சொல்லி ஆணையிடலாம். உங்களது குரலை அலெக்ஸாவில் பதிவு செய்து வைத்து விட்டீர்கள் என்றால் மெஷினில் தண்ணீர், பால், காஃபி பொடி இருந்தால் போதும் வீட்டில் எந்த மூலையில் இருந்து கொண்டும் ‘ ஹேய் என்னருமை காஃபி மேக்கரே எனக்கு சூடா, ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போட்டுத் தாயேன்’ என்று  ஆணையிடலாமாம். முக்கியமான விஷயம் பால் பொங்கும் அபாயம் இதில் இல்லை என்கிறார்கள். ஒரே ஒரு கண்டீஷன் உங்களது மொபைலில் சதா நேரமும் அன்லிமிடெட் நெட் வசதி இருக்க வேண்டும். அத்துடன் மொபைல் ஆப்புக்கும், ஸ்மார்ட் ஃபோனுக்குமான இணைப்பு கட் ஆகாமல் இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT