திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?  
செய்திகள்

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?

கூகுள் தேடுபொறியில் ஒருநாளைக்கு நாம் எத்தனை விஷயங்களை தேடுவோம், எதையெல்லாம் தேடுவோம் என்று நம்மால் சொல்லிவிட முடியாது.

DIN

கூகுள் தேடுபொறியில் ஒருநாளைக்கு நாம் எத்தனை விஷயங்களை தேடுவோம், எதையெல்லாம் தேடுவோம் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. நினைத்ததையெல்லாம் தேடுவோம். தெரியாததையெல்லாம் தேடுவோம். தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலவற்றையும் தேடுவோம்.

ஆனால், யார் யார் எதை எதை தேடுகிறார்கள் என்பதை கூகுள் தேடுபொறி நிறுவனம் கணக்கு வைத்திருக்கிறது.

அந்த வகையில், அதிகம் தேடப்பட்ட விஷயங்களை ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கும். அதன்படி, திருமணமான பெண்கள் அதிகம் தேடிய விஷயங்கள் குறித்த ரகசியத்தை கூகுள் போட்டுடைத்துள்ளது.

நிச்சயமாக இதைப் படிக்கும் போது உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும்.
புதிதாகத் திருமணமான பெண்கள் அதிகம் தேடும் விஷயங்கள் பற்றி கூகுள் தேடுபொறியின் புள்ளிவிவரம் கூறுவது என்னவென்றால், திருமணமான பெண்கள், தங்களது கணவர்களைப் பற்றித்தான் அதிகமாக கூகுளில் தேடியிருக்கிறார்களாம்.

என்ன கணவரைப் பற்றியா என்று புருவங்களை உயர்த்த வேண்டாம். உண்மைதான்.

தனது கணவருக்கு மிகவும் பிடித்தது என்ன? என்ற கேள்வியைத்தான் அதிகம் பெண்கள் எழுப்பியுள்ளனர். (பாவம் மனைவிக்கே தெரியாத ஒரு விஷயத்தை கூகுள் சொல்லும் என்று நம்பியிருக்கிறார்களே இந்த பெண்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்) 

சரி வாருங்கள் அடுத்த விஷயத்துக்குச் செல்வோம்.. அடுத்ததாக அவர்கள் தேடியிருப்பது, கணவரின் இதயத்தைக் கொள்ளையடிப்பது எப்படி? கணவரை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி? என்ற கேள்விகளைத்தான்.

இதுபோன்ற கேள்விகளை புதிதாகத் திருமணமான பெண்கள் அடிக்கடி எழுப்பியுள்ளதாக நாங்கள் சொல்லவில்லை. கூகுள் சொல்கிறது. 

இதற்கு அடுத்தபடியாக, குடும்பத்தை எப்படி திட்டமிடலாம், குழந்தை பெற்றுக் கொள்ள சரியான நேரம் எப்போது என்பதையும் அதே அப்பாவிப் பெண்கள் கூகுளில்  தேடியுள்ளனர்.

சரி இதோடு நின்றுவிட்டதா கேள்விக்கணைகள் என்று கேட்கிறீர்களா? இல்லை இல்லை. இன்னும் இருக்கிறது. வாருங்கள் அதையும் என்னவென்று பார்த்துவிடலாம்.

திருமணமாகி, புதிய குடும்பத்துக்குள் நுழையும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அந்தக் குடும்பத்தில் ஒருவராக எவ்வாறு மாறுவது? குடும்ப பொறுப்புகளை எப்படி சமாளிப்பது? என்பது போன்ற பொறுப்பான பல கேள்விகளை பெண்கள் கூகுளிடம் எழுப்பியுள்ளனர்.

திருமணமான பெண்கள் என்றில்லை, வேலை செய்யும் மற்றும் சுயமாக தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் பெண்கள் கூட கூகுளை நாடி, தேடியுள்ளனர். அதாவது, திருமணத்துக்குப் பிறகு சொந்தத் தொழிலை எப்படி செய்வது? வேலையையும் குடும்பத்தையும் எப்படி சமாளிப்பது?  போன்ற கவலைகளையும் பெண்கள் கூகுளிடம் கொட்டியுள்ளனர்.

இதற்கு அவர்களுக்கு விடை கிடைத்ததா? விடைகளை அவர்கள் பரீட்சித்துப் பார்த்து பயனடைந்தனரா என்பதை எல்லாம் வழக்கம் போல காலம் தான் பதில் சொல்லும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

தெய்வ தரிசனம்... குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்!

Dinamani வார ராசிபலன்! | Aug 31 முதல் Sep 06 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT