முகப்பு
செய்திகள்

ஃபிரிட்ஜின் மேல் இந்த பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள்!

ஃபிரிட்ஜின் மேல் பகுதியில் வைக்கக்கூடாத பொருள்கள் பற்றி...

Updated On : 29 ஜூன் 2026, 3:41 pm IST
ஃபிரிட்ஜ் - ANI
பகிர்:

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் தற்போது பெரும்பாலான வீடுகளில் ஃபிரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்டி பயன்பாட்டில் உள்ளது.

இந்த ஃபிரிட்ஜின் மேல் பகுதி சமதளமாக இருப்பதால் பெரும்பாலானோர் வசதியாக அதன் மேல் மற்ற பொருள்களை வைக்கின்றனர். ஃபிரிட்ஜின் மேல் பகுதியை அலங்கரிக்கும் பொருள்கள் என்றுகூட வந்துவிட்டன.

ஆனால், பாதுகாப்பு கருதி குளிர்சாதனப் பெட்டியின் மீது சில பொருள்களை வைக்கக் கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் ஃபிரிட்ஜின் பக்கவாட்டின் இரு புறமும் அதேபோல மேல்பகுதியும் கடும் வெப்பமாக இருக்கும். அதன் குளிர்விக்கும் செயல்முறை காரணமாக, அதிகப்படியான வெப்பம், மேல் பகுதியில் வெளியேற்றப்படுவதால், குளிர்சாதனப் பெட்டியின் மீது எந்தப் பொருள்களையும் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

ஃபிரிட்ஜின் மேல் வைக்கக்கூடாத பொருள்கள்

1. உடையக் கூடிய பொருள்கள்

கண்ணாடிப் பொருள்கள் அல்லது எளிதில் உடையக்கூடிய பிற பொருள்களை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியின் (ஃபிரிட்ஜ்) மேல் வைக்கக் கூடாது. ஏனெனில் கதவைத் திறக்கும்போது அவை கீழே விழுவதற்கான ஆபத்து உள்ளது. அதேபோல அதிக வெப்பம் காரணமாக அந்த பொருள்கள் உடைய வாய்ப்புள்ளது.

2. காய்கறிகள்

உருளைக்கிழங்கு, பூண்டு, வாழைப்பழம் போன்ற சில காய்கறிகள், பழங்களை குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே வைக்கக் கூடாது. அதேபோல அதிக வெப்பம் வெளியேறுவதால் இவற்றை குளிர்சாதனப் பெட்டியின் மேல் பகுதியிலும் வைக்கக்கூடாது. ஏனெனில் அவை சீக்கிரமாக கெட்டுப்போக வாய்ப்புண்டு.

3. வீட்டைச் சுத்தம் செய்யும் பொருள்கள்

வீட்டைச் சுத்தம் செய்யும் கிளீனர், சோப்பு பவுடர், ஆகியவற்றை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கக் கூடாது. ஏனெனில் இவற்றில் உள்ள வேதிப்பொருள்கள் கசிந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியாகும் வாயுக்களுடன் வினைபுரியலாம்.

4. பிளாஸ்டிக் பொருள்கள்

சிலர் அழகுக்காக பிளாஸ்டிக் அழகு சாதனப் பொருள்கள், பிளாஸ்டிக் செடிகள் ஆகியவற்றை ஃபிரிட்ஜின் மீது வைப்பார்கள். இதுவும் முற்றிலும் தவறு. ஃபிரிட்ஜின் வெப்பம் அதன் மேல் வைக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களைப் பாதிக்கலாம். அதேபோல சிறிய இயற்கையான தாவரங்களை வைத்தாலும் அவை வாடிவிடும்.

- கோப்புப்படம்

5. மதுபானங்கள், திரவப் பொருள்கள்

ஒயின் மற்றும் பிற மதுபானங்களை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தள்ளிவைக்க வேண்டும். அதுபோல திரவங்கள் கசிந்து உள்ளே சென்றால் அது விளைவுகளை ஏற்படுத்தும்.

6. வீட்டு உபயோகப் பொருள்கள்

சிலர் இடமில்லை என்ற காரணத்தால் மிக்ஸி, ஜூஸர், ஏன் சிலர் சிறிய கிரைண்டர்களைக்கூட ஃபிரிட்ஜின் மீது வைப்பார்கள். ஒரு மின்சாதனப் பொருள் மீது மற்றொரு மின் சாதனப் பொருளை ஒருபோதும் வைக்கக் கூடாது, அது மிகவும் ஆபத்தானது.

7. மருந்துகள்

மருந்துகள் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் வெப்பம் காரணமாக வேதிவினைகள் ஏற்படலாம். இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது.

8. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள்

பிஸ்கட், சாக்லேட், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பிற உணவுப் பொருள்களைப் பலரும் குளிர்சாதனப் பெட்டியின் மேல் வைக்கிறார்கள். வெப்பமான இடத்தில் உணவுப் பொருள்களை வைப்பது நல்லதல்ல. அவை கெட்டுப்போக வாய்ப்புண்டு.

பொதுவாகவே ஃபிரிட்ஜ் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும் பாதுகாப்பு கருதி அதன் மீது எந்த பொருள்களையும் வைக்காமல் இருப்பது நல்லது என்றே அறிவுறுத்தப்படுகிறது.

summary

Do not place these items on top of the Refrigerator

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments