FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதிமுகவினர் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது: வைகோ எச்சரிக்கை

மதிமுகவினருக்கு பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - எக்ஸ்
பகிர்:

சென்னை: மதிமுகவினர் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது; அவ்வாறு பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகள் தான் கலந்துகொள்ளப் போவதில்லை மற்றும் அவ்வாறு பேனர் வைக்கும் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிக நிறுவனத்தார், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புக்களைச் சார்ந்தோர், திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகள் நடத்துவோர் சாலை ஓரங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைப்பதனால் பல நேரங்களில் அந்தப் பேனர்கள் கீழே விழும்போது அதில் சிக்கி பலர் படுகாயமுற்றும், சிலர் உயிர் இழப்புக்கும் ஆளானார்கள்.

Advertisement

Advertisement

இதனால் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும், அப்படி வைத்தால் அபராதமும் தண்டனையும் உண்டு என்று நீதிமன்றங்களும், அரசும் எச்சரித்தும்கூட இந்த பேனர் கலாசாரம் அகலாமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கின்ற விபரீதம் நேர்ந்து வருகிறது.

அதனால்தான் அண்மையில்கூட அப்படி ஒரு துயர நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, நமது இயக்கத்தினர் பேனர்கள் வைக்கக் கூடாது என்று கூறியிருந்தும்கூட ஆர்வமிகுதியால் நம் கழகக் கண்மணிகள் அவ்வப்போது ஆங்காங்கே பேனர்கள் வைத்துவிடுகின்றனர். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அதனைக் காண்கிறேன்.

இப்போது திட்டவட்டமாக அறிவிக்கிறேன், எக்காரணத்தை முன்னிட்டும் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், தங்கள் இல்ல நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தாம் வசிக்கும் இடத்தில் உள்ள நிகழ்ச்சிகளாக இருந்தாலும் இனி எங்கும் பேனர்கள் வைக்கவே கூடாது. அதனை மீறி யாராவது பேனர்கள் வைத்தால், அந்த நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுக்க மாட்டேன். இதற்கு மேலும் பிடிவாதமாக கழகத்தினர் யார் பேனர் வைத்தாலும் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்துள்ளார்.

MDMK General Secretary Vaiko’s warning has strictly banned party members from putting up banners and hoardings for any events.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.