FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முடி உதிர்தல் பிரச்னையா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! நிபுணர்கள் அறிவுறுத்தல்

முடி உதிர்தல் பிரச்னை குறித்து தோல் நிபுணர்கள் கூறியுள்ளது பற்றி....

கோப்புப் படம் - ANI
பகிர்:

- சுப்ரியா ரமேஷ்

முடி உதிர்தல் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன? அதைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றி தோல் மருத்துவர்கள் கூறுவது....

இந்த காலத்தில் முடி உதிர்தல் என்பது வயதுடன் தொடர்புடையதாக இருப்பதில்லை. ஏனெனில் இப்போது ஆண், பெண் இருபாலருக்கும் 20 -30 களிலேயே முடி உதிர்தல் பிரச்னை தொடங்கிவிடுகிறது.

Advertisement

Advertisement

முடி உதிர்தலைச் சரிசெய்ய வேண்டும் என்று அழகு நிலையங்கள், சிகிச்சைகள் என பலரும் முயற்சிக்கின்றனர். சிலர் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டு பின்னர் இறுதிக்கட்டத்தில் கவலைப்படுகின்றனர்.

அதேபோல, பெரும்பாலானோர் தலைமுடி உதிர்தலைச் சரிசெய்ய ஒரே மாதிரியான முறையைக் கடைப்பிடிக்கின்றனர். சமூக வலைதளைங்களில் அல்லது பலரது பரிந்துரைக்கு ஏற்ப, புதிய ஷாம்பு, வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது, புரோட்டீன் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது என முயற்சிக்கின்றனர். ஆனால், அனைவருக்கும் ஒரே காரணத்தால் முடி உதிர்வதில்லை. காரணம் என்னவென்று தெரியாமல் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்களுக்கு ஏன் முடி உதிர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு என்ன மாதிரியான முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபுணரிடம் ஆலோசனை பெற்று செய்வது நல்லது என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தோல் மருத்துவர்கள் கூறுவது என்ன?

"முடி உதிர்தலுக்கான காரணம் தெரியாமல் நேரடியாக சில தயாரிப்பு பொருள்களைப் பயன்படுத்துவதால் அது மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. தலைமுடியை மென்மையாகக் கழுவுங்கள், வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தடவுங்கள், புரதச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் முடி உதிர்வு ஏன் உங்களுக்கு ஏற்படுகிறது என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அது தெரியாவிட்டால் எந்த தயாரிப்பும் பலனளிக்காது" என்று மேன் மேட்டர்ஸ் நிறுவன தோல் மருத்துவரான டாக்டர் சுஷ்மிதா டுரே தெரிவித்தார்.

இந்தியாவில் முடி உதிர்வு என்பது இனி 40 வயதுகளில் ஏற்படும் ஒரு பிரச்னை அல்ல. 25 வயதுக்குள்பட்ட ஆண்களில் பெரும்பாலோர் முடி உதிர்வதாக எங்களிடம் வருகின்றனர். அதைத் கண்காணிக்கத் தொடங்கும் நேரத்தில் அவர்களின் நிலைமை முற்றி விடுகிறது என்கிறார்.

தோல் மருத்துவர் மற்றும் அழகுக் கலை நிபுணரான டாக்டர் மிக்கி சிங் இதுபற்றி கூறும்போது,

"ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பராமரிப்பு முறைகள் தேவைப்படுகின்றன. முடி வேர்க்கால்கள் உடனடியாக உதிர்வதில்லை, அவை ஏறக்குறைய இரண்டு முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகே உதிர்கின்றன. எனவே, உங்களுக்கு இப்போது முடி உதிர்வு ஏற்பட்டால் 3 மாதங்களுக்கு முன்னால் என்ன நடந்தது என்றுதான் கவனிக்க வேண்டும்.

டெங்கு, டைபாய்டு, கரோனா தொற்று பாதிப்பு, திருமணத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் கடுமையான உணவுக் கட்டுப்பாடு, பிரசவம், அறுவைச் சிகிச்சை, தேர்வு அல்லது வேலை அழுத்தம் ஆகியவை முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

அந்த பிரச்னையில் இருந்து நீங்கள் வெளியே வந்ததும் பொதுவாக 6 மாதங்களுக்குள் முடி உதிர்தல் தானாக சரியாகிவிடும்.

ஆண்ட்ரோஜெனடிக் (வகை) முடி உதிர்தல், டெலோஜென் எஃப்ளூவியம், ஊட்டச்சத்துக் குறைபாடு, பொடுகு அல்லது செபோரெய்க் டெர்மடிடிஸ் போன்றவை முடி உதிர்தலை ஏற்படுத்துகின்றன. ஆனால் இது ஒவ்வொன்றுக்கும் முற்றிலும் மாறுபட்ட பராமரிப்பு முறைகள் தேவைப்படுகின்றன" என்றார்.

சரியான பரிசோதனை அவசியம்!

முடி உதிர்தலுக்கு சரியான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அதற்கேற்ப சீரம் ஃபெரிட்டின், வைட்டமின் டி, வைட்டமின் பி12, தைராய்டு செயல்பாடு, ரத்த எண்ணிக்கை என சில சோதனைகளை பரிந்துரைப்பதாக டாக்டர் டுரே தெரிவிக்கிறார்.

ஊட்டச்சத்து ரீதியான பிரச்னைகள் இருந்தால் பயோட்டின் மற்றும் பிற ஊட்டச்சத்து மாத்திரைகள் உதவும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள் மட்டும் முடி உதிர்தலையோ வழுக்கையையோ சரிசெய்யாது என்கிறார் டாக்டர் சிங்.

முடி உதிர்தலுக்கு பயோட்டின் மாத்திரைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அதிக அளவு பயோட்டின் எடுப்பது தவறான முடிவுகளைத் தரக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

தமிழில்: எம். முத்துமாரி

summary

Dont do this mistake for hair fall, doctors opinion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments