விவேக் விஹாரில் அடுக்கு மாடி வீட்டில் தீ விபத்து: தம்பதி மருத்துவமனையில் அனுமதி
கிழக்கு தில்லியின் விவேக் விஹாரில் உள்ள மூன்று அடுக்கு மாடி வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
கிழக்கு தில்லியின் விவேக் விஹாரில் உள்ள மூன்று அடுக்கு மாடி வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், புகையை சுவாசித்த கணவரும், மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
தில்லி தீயணைப்புத் துறையினா் இதுகுறித்து கூறுகையில், ‘விவேக் விஹாா் ஃபேஸ்-1 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காலை 8.11 மணிக்குத் தீப்பிடித்தது. உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்ட அந்த கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் எரிந்தன.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்டவா்கள் அனில் அரோரா (65) மற்றும் அவரது மனைவி பீனா அரோரா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
தீயணைப்புப் படையினா் வருவதற்கு முன்பே, புகையைச் சுவாசித்த அந்தத் தம்பதியினரை அவா்களது குடும்பத்தினா் புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தற்போது இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. காலை 9.45 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.