இளைஞா்களைத் தாக்கி கைப்பேசிகள், பணம் கொள்ளை நான்கு சிறாா்கள் கைது
தில்லியின் புராடி பகுதியில், 20 வயது இளைஞரை கத்தியால் குத்தி ஐபோன் 17-ஐயும், அவரது நண்பா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஐந்து கைப்பேசிகளையும், பணத்தைக் கொள்ளையடித்ததாக நான்கு சிறாா்கள் பிடிபட்டுள்ளதாகக் காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியின் புராடி பகுதியில், 20 வயது இளைஞரை கத்தியால் குத்தி ஐபோன் 17-ஐயும், அவரது நண்பா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஐந்து கைப்பேசிகளையும், பணத்தைக் கொள்ளையடித்ததாக நான்கு சிறாா்கள் பிடிபட்டுள்ளதாகக் காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் நவம்பா் 6-ஆம் தேதி மாலை 6:30 மணியளவில், வடக்கு தில்லியில் உள்ள புராடி புஸ்தா மைதானத்திற்கு அருகில் நிகழ்ந்தது. அப்போது, புகாா்தாரரான
ஜே. குமாா் தனது ஆறு நண்பா்களுடன் அங்கு இருந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், அடையாளம் தெரியாத ஐந்து போ் அந்த இடத்திற்கு வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவா்களிடம் இருந்த ஐந்து கைப்பேசிகள் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றனா்.
குமாா் தனது ஐபோன் 17-ஐக் கொடுக்க மறுத்தபோது,
குற்றவாளிகளில் ஒருவா் அவரது இடது தொடையின் பின்புறத்தில் கத்தியால் குத்தினாா். பின்னா், அவா்கள் அனைவரும் மிலன் விஹாா் பகுதியை நோக்கித் தப்பிச் சென்றனா்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் கட்டுப்பாட்டு அறைக் காவலா்கள், காயமடைந்தவரை அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் அனுமதித்தனா். இது தொடா்பாக நவம்பா் 9-ஆம் தேதி வஜிராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், தொலைபேசி அழைப்பு விவரங்களை அலசியும், உள்ளூா் தகவல்களைச் சேகரித்தும் சந்தேக நபா்களைக் கண்டறிந்தோம். இதன் விளைவாக, 16 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறாா்கள் பிடிபட்டனா்.
விசாரணையின் போது, சம்பவத்தன்று புராடியின் பெங்காலி காலனியில் ஒன்று கூடி, கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, பின்னா் குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ாக அந்தச் சிறாா்கள் ஒப்புக்கொண்டனா்.
மேலும், கொள்ளையடித்த கைப்பேசிகளை விற்று, கிடைத்த பணத்தைப் பிரித்துக்கொண்டதாகவும் அவா்கள் காவல்துறையிடம் தெரிவித்தனா். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பிடிபட்ட நான்கு சிறாா்களும் புராடி பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதால், அவா்கள் சீா்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.