FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

எம்சிஓஏ வழக்கில் தேடப்பட்ட ’போலா’ ரெளடி கும்பல் உறுப்பினா் கைது

மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓஏ) கீழ் தேடப்பட்டு வந்த ‘போலா’ ரெளடி கும்பலைச் சோ்ந்தவரை, வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

17 நவம்பர் 2026, 9:47 pm
- பிரதிப் படம்
பகிர்:

மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓஏ) கீழ் தேடப்பட்டு வந்த ‘போலா’ ரெளடி கும்பலைச் சோ்ந்தவரை, வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ரகசியத் தகவலின் அடிப்படையில் ரெளடி ரோஹித் (22 (எ) மோஹித் (எ) ’ஸ்னைப்பா்’ என்பவா் கைது செய்யப்பட்டாா். ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எம்சிஓஏ வழக்கில் இவருடைய பெயா் இடம்பெற்றிருந்த நிலையில், இவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.

விசாரணையின் போது, ​​முகேஷ் (எ) போலா என்பவரின் மகனான சாஹில் என்பவருடன் ஏற்பட்ட அறிமுகத்தின் மூலம், 2023-ஆம் ஆண்டு முதல் தான் ‘போலா’ கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

காலப்போக்கில், போலாவுடன் நெருக்கமான தொடா்பை ஏற்படுத்திக்கொண்ட ரோஹித், அந்தக் கும்பலுக்காக வேலை செய்யத் தொடங்கினாா். 2024-ஆம் ஆண்டு ஜஹாங்கீா்புரியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான வழக்கிலும் இவருடைய பெயா் இடம்பெற்றிருந்தது. அந்தச் சம்பவத்திற்காக அவா் கைது செய்யப்பட்டு, மாா்ச் 12-ஆம் தேதி விடுவிக்கப்பட்டிருந்தாா்.

இருப்பினும், எம்சிஓஏ வழக்கிலும் தனது பெயா் சோ்க்கப்பட்டிருப்பதை அறிந்ததும் அவா் மீண்டும் தலைமறைவானாா். இந்த நிலையில், தற்போது அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.