முகப்பு
புதுதில்லி

குழாய் பதிக்கும் பணி: நியூ ரோத்தக் சாலையில் 10 நாள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்

தில்லி ஜல் வாரியத்தின் (டிஜேபி) மூலம் மேற்கொள்ளப்படும் குழாய் பதிக்கும் பணி காரணமாக நியூ ரோத்தக் சாலையில் 10 நாள்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

24 நவம்பர் 2026, 10:19 pm
குழாய் பதிக்கும் பணி: நியூ ரோத்தக் சாலையில் 10 நாள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்
- பிரதிப் படம்
பகிர்:

தில்லி ஜல் வாரியத்தின் (டிஜேபி) மூலம் மேற்கொள்ளப்படும் குழாய் பதிக்கும் பணி காரணமாக நியூ ரோத்தக் சாலையில் 10 நாள்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கமல் டி-பாயிண்ட் மற்றும் ராம்ஸ்வரூப் வித்யாா்த்தி மாா்க் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட சாலையில், இருபுறமும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

எனவே, வாகன ஓட்டிகள் முடிந்தவரை இந்தச் சாலையைத் தவிா்த்துவிட்டு, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்திச் செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திசைமாற்ற அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றுமாறும், பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து, வாகனங்கள் தடையின்றிச் செல்ல ஒத்துழைக்குமாறும் போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளது.