புறவட்டச் சாலையில் சாலை விபத்தில் 19 வயது இளைஞா் பலி, நண்பா் காயம்!
வடக்கு தில்லியின் கா்னால் பைபாஸ் அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஸ்கூட்டா் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வடக்கு தில்லியின் கா்னால் பைபாஸ் அருகே புறவட்டச் சாலையில் (அவுட்டா் ரிங் ரோடு) சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஸ்கூட்டா் மீது மோதிய விபத்தில் 19 வயது இளைஞா் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் அவருடன் பயணம் செய்த அவரது நண்பா் காயமடைந்தாா்.
இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது: பலஸ்வா டெய்ரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் விபத்து நடந்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (பிசிஆா்) தகவல் கிடைத்தது. சம்பவ பகுதியில் காயமடைந்த அபிஷேக், சிவம் ஆகிய இருவரும் முதலில் பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக எல்என்ஜேபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். அங்கு அபிஷேக் உயிா் பிரிந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை அடையாளம் காணவும், அதன் ஓட்டுநரைப் பிடிக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காவல்துறையினா் கூறினா்.
Advertisement
Advertisement