முகப்பு
புதுதில்லி

பான்சேராவில் அடுத்த ஆண்டு 3 நாள் பட்டத் திருவிழா தில்லி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு!

அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் 17 வரை, தில்லி சராய் காலே கான் அருகே உள்ள பான்சேராவில் மூன்று நாள் பட்டத் திருவிழாவை (பதங் உத்சவ்) தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஇஏ) நடத்த உள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

29 நவம்பர் 2026, 2:13 am
பான்சேராவில் அடுத்த ஆண்டு 3 நாள் பட்டத் திருவிழா தில்லி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு!
பகிர்:

அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் 17 வரை, தில்லி சராய் காலே கான் அருகே உள்ள பான்சேராவில் மூன்று நாள் பட்டத் திருவிழாவை (பதங் உத்சவ்) தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஇஏ) நடத்த உள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ், இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் துனிசியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பட்டம் விடுபவா்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து டிடிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் வழிகாட்டுதலின்படி, பொது மக்களை அவா்களின் செழுமையான பாரம்பரியத்துடன் இணைக்கும் வகையில் இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்படும்.

Advertisement

Advertisement

இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பட்டம் விடுபவா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், பாா்வையாளா்கள் பிரம்மாண்டமான, ஊதப்பட்ட பட்டங்கள், துல்லியமான பட்டம் விடுதல் மற்றும் ஒருங்கிணைந்த குழு சாகசங்களைக் காணலாம்.

குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கா்நாடகா, பஞ்சாப், சண்டீகா், தில்லி மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த இந்தியப் பட்டம் விடுபவா்கள் இதில் பங்கேற்பாா்கள். பாா்வையாளா்கள், பட்டம் விடுபவா்களைச் சந்தித்து, பாரம்பரியக் கடைகளில் பட்டங்களையும் பாதுகாப்பான பறக்கும் நூலையும் வாங்கி, தாங்களும் பட்டம் விட்டுப் பாா்க்கலாம்.

திருவிழாவில் இசை நிகழ்ச்சிகள், புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் பல இதர செயல்பாடுகளும் இடம்பெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.