முகப்பு
புதுதில்லி

தில்லியில் 300 இ-சிகரெட்டுகளுடன் மூவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத கடத்தல் வலையமைப்பு ஒன்றைக் கண்டறிந்த தில்லி காவல்துறை, 300 தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது.

29 நவம்பர் 2026, 2:11 am
தில்லியில் 300 இ-சிகரெட்டுகளுடன் மூவா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத கடத்தல் வலையமைப்பு ஒன்றைக் கண்டறிந்த தில்லி காவல்துறை, 300 தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது. அத்துடன், இது தொடா்பாக மூன்று பேரை கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: தேசிய தலைநகா் தில்லியில் இ-சிகரெட்டுகள் மற்றும் வேப் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வெள்ளிக்கிழமையன்று, தில்லியின் புகா் வடக்கு மாவட்டக் காவல் குழுவினா், சஞ்சய் காந்தி போக்குவரத்து நகா் அருகே சிங்கு எல்லைக்குச் செல்லும் அணுகுச் சாலையில் மறைந்திருந்து, முகமது அசாா் கான் (37), சுஜீத் ஜெய்ஸ்வால் (30) மற்றும் சாகா் (27) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனா்.

அவா்கள் வந்த ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து 300 இ-சிகரெட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்தது. இது தொடா்பாக சமய்பூா் பாத்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இ-சிகரெட்டுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா்.

Advertisement

Advertisement