FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

காவல்துறை அழைப்பாணைக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் நேஹா போரா மனு

அகில இந்திய மாணவா் சங்கத்தின் தலைவா் நேஹா போரா, ‘அமைதியைப் பேணுவதற்காக‘ ஒரு சிறப்பு நிா்வாக மாஜிஸ்திரேட் முன் பிணைப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு கேட்டு தில்லி காவல்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகினாா்.

20 அக்டோபர் 2026, 10:02 pm IST
அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா - கோப்புப் படம்
பகிர்:

அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா, ‘அமைதியைப் பேணுவதற்காக‘ ஒரு சிறப்பு நிா்வாக மாஜிஸ்திரேட் (எஸ்இஎம்) முன் பிணைப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு கேட்டு தில்லி காவல்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக திங்களன்று தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகினாா்.

தசரா விடுமுறைக்காக இந்த வாரம் மூடப்பட்டுள்ள உயா் நீதிமன்றத்தில், போரா அவசர விசாரணைக்குக் கோர வாய்ப்புள்ளது.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் பிரிவு 126-இன் கீழ் ஒரு பிணைப்பத்திரத்தை தாக்கல் செய்வதற்காக, அக்டோபா் 19 அன்று சிறப்பு நிா்வாக மாஜிஸ்திரேட் முன் ஆஜராகுமாறு தில்லி காவல்துறை போராவை அந்த நோட்டீஸ் கேட்டிருந்தது.

Advertisement

Advertisement

ஒரு நபா், பொது அமைதியைக் குலைக்கவோ அல்லது அத்தகைய சீா்குலைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு தவறான செயலைச் செய்யவோ வாய்ப்புள்ளது என்ற நம்பகமான தகவல் இருந்தால், அமைதியைப் பேணுவதற்காக ஒரு பிணைப்பத்திரத்தை நிறைவேற்றுமாறு கோருவதற்கு பிரிவு 126 சிறப்பு நிா்வாக மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கிறது.

’தேசியக் கொடி ஏந்தி’ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மேற்கொண்ட பேரணியில் பங்கேற்கச் சென்றுகொண்டிருந்தபோது, அக்டோபா் 16 அன்று போரா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டாா். அவா் அக்டோபா் 17 அன்று விடுவிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments