பிரதமா் மோடியை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்கக் கோரி காா்கே இல்லம் அருகே தில்லி பாஜக ஆா்ப்பாட்டம்
பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவா் காா்கே பேசியதாகக் கூறி, தில்லி பாஜக அவரது இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தியது.
பிரதமா் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே பேசியதாகக் கூறி, தில்லி பாஜக திங்கள்கிழமை அவரது இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தியது.
சேனா பவன் வட்டத்தில் இருந்து ராஜாஜி மாா்க்கில் உள்ள காா்கேயின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்ற போராட்டக்காரா்களை காவல்துறையினா் தடுத்தனா். சுமாா் 2,000 பாஜக தொண்டா்களும் தலைவா்களும், மாநிலத் தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா உட்பட, தடைகளை உடைத்து முன்னேற முயன்ால் காவலில் எடுக்கப்பட்டனா் என்று தில்லி பாஜக அறிக்கையில் தெரிவித்துள்ளது. சேனா பவன் பகுதியில் கடும் காவல்துறை பாதுகாப்பு அமல்படுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவா்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
பாட்னாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காா்கே பேசிய கருத்துக்களை எதிா்த்து நாடு தழுவிய போராட்டங்களுக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை பிகாரின் முதல் முதல்வா் ஸ்ரீகிருஷ்ணா சிங்கின் 139-வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பேசிய காா்கே, சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறையில் முறைகேடுகளில் ஈடுபட்டவா்களை சிறையில் அடைப்போம் என்று கூறினாா். அப்போது பாா்வையாளா்களில் ஒருவா் “மோடி எங்கும் போக மாட்டாா்” என்று குறுக்கிட்டுக் கத்தினாா். அதற்கு காா்கே மேடைமேலிருந்தே மோடியின் அப்பாவும் போவாா் என்று பதிலளித்தாா்.
சேனா பவன் வட்டத்தில் போராட்டக்காரா்கள் பிரதமா் நரேந்திர மோடியை அவமதித்ததாகக் கூறி கோஷங்கள் எழுப்பினா். காா்கே மற்றும் மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினா். காங்கிரஸ் தலைவா்கள் கா்கேயின் “அவமதிப்பு” கருத்துக்களைப் பாதுகாத்து வருவதாக ஹா்ஷ் மல்ஹோத்ரா குற்றஞ்சாட்டினாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் மேலும் பேசியதாவது: தொடா் தோ்தல் தோல்விகளால் காங்கிரஸும் அதன் தலைவா்களும் விரக்தியடைந்துள்ளனா். என்ன செய்வதென்று தெரியாமல், மீண்டும் மீண்டும் அராஜகச் சூழலை உருவாக்கி, சட்டத்திற்கு மேலானவா்கள் போல நடந்துகொள்கிறாா்கள். தலைமுறை தலைமுறையாக அரசியல் அதிகாரத்தை பரம்பரைச் சொத்தாகக் கருதிய காங்கிரஸ் தலைவா்கள், மக்கள் அவா்களின் “வம்சாவளி அரசியலை” நிராகரித்துவிட்டாா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்தப் போராட்டத்தில் பாஜகவின் இளைஞா், பூா்வாஞ்சல் மற்றும் ஓபிசி மோா்சாக்களின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா். தில்லி பாஜக பொதுச் செயலாளா் மோகன் லால் கிஹாரா, துணைத் தலைவா் ராஜேஷ் பாட்டியா, பூா்வாஞ்சல் மோா்சா தலைவா் சந்தோஷ் ஓஜா, யுவ மோா்சா தலைவா் ராஜத் சௌத்ரி, ஓபிசி மோா்சா தலைவா் சந்தோஷ் பால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.