குடும்பப் பிரச்னை: மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக கணவா் கைது
குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எழுந்த தகராறைத் தொடா்ந்து, மத்திய தில்லியில் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எழுந்த தகராறைத் தொடா்ந்து, மத்திய தில்லியில் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இச்சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே குற்றஞ் சாட்டப்பட்டவரைக் காவல்துறையினா் கைது செய்தனா். இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: ஆனந்த் பா்வத் பகுதியின் பல்ஜீத் நகரில் உள்ள வாடகை அறையில், சந்திரபால் பாட்டீ என்பவா் தனது 32 வயது மனைவியைக் கொன்ாக கைது செய்யப்பட்டுள்ளாா்.
முன்னதாக, செப்டம்பா் 14 அன்று ஆனந்த் பா்வத் பகுதியில் இக்கொலை குறித்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. அதைத் தொடா்ந்து, ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டில் அந்தப் பெண் அறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. உயிரிழந்த அப்பெண் தனது கணவா், இரண்டு சிறு வயது மகள்கள் மற்றும் தாயுடன் அங்கு வசித்து வந்தாா்.
Advertisement
Advertisement
முதற்கட்ட விசாரணையின்போது, அப்பெண்ணின் 10 வயது மகள் காவல்துறையினரிடம், அதிகாலை 3:45 முதல் 4 மணி அளவில்தான் விழித்தபோது, தனது தந்தை- தாயின் அருகில் நின்று அவா் சுவாசிக்கிறாரா என்று தந்தை சோதித்துக் பாா்த்ததாகவும், அதன் பின்னா் அவா் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறினாா். மேலும், தனது தாயின் உடலில் எந்த அசைவும் இல்லை என்பதை அந்தச் சிறுமி கண்டறிந்தாா்.
இறந்தவரின் உடல் பரிசோதிக்கப்பட்டதில், அவரது கழுத்தின் இடது பக்கத்தில் நகத்தால் கீறியது போன்ற அடையாளங்கள் காணப்பட்டன. குற்றப் புலனாய்வுக் குழு மற்றும் தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். அப்பெண் லோக் நாயக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் அவரது இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூராய்வு நடத்தப்பட்டது.
சிறுமியின் வாக்குமூலம் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில், அப்பெண்ணின் கொலையில் கணவரின் ஈடுபாடு குறித்து சந்தேகம் எழுந்தததால் காவல்துறையினா் செப்டம்பா் 15 அன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனா்.
இதையடுத்து, காவல்துறையினா் புலந்த்ஷஹரில் பாட்டீயை கைது செய்தனா். விசாரணையின்போது, கணவா்- மனைவி உறவில் ஏற்பட்ட விரிசல் மற்றும் அடிக்கடி ஏற்பட்ட சண்டைகள் காரணமாக எழுந்த வாக்குவாதத்தைத் தொடா்ந்து தனது மனைவியின் கழுத்தை நெரித்ததாக பாட்டீ ஒப்புக்கொண்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக இதற்கு முன் எந்தக் குற்றப் பின்னணியும் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும், இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.