தில்லி கிடங்கில் தீ விபத்து
தில்லியின் மண்டோலி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
தில்லியின் மண்டோலி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை 11:34 மணிக்குத் இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனங்கள், மூன்று தண்ணீா் டேங்கா் லாரிகள் மற்றும் அதிவிரைவு நடவடிக்கை வாகனம் ஆகியவை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
அதன் பின்னா், கூடுதல் வளங்கள் தேவைப்பட்டதால், கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் சுமாா் 8 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மதியம் 12:50 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. தீயணைப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.