கருணாகரத் தொண்டைமான்
இடர்க்கரம்பை' கல்வெட்டு வடமொழிச் செய்யுளால் அமைந்து, அது தெலுங்கு எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளது. இது தமிழாக்கம் செய்தும் நூலில் தரப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

கருணாகரத் தொண்டைமான்-குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.104; ரூ.120; அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்- 613 007. ✆ 75983 06030.
சோழர் வரலாற்றில் நீண்டகாலம் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்கச் சோழனுக்காக கலிங்கம் (இன்றைய ஒடிஸô மாநிலப் பகுதி) வரை சென்று போர் புரிந்து வெற்றி கண்ட அவரது படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் குறித்தும், அப்போர் புகழ்பாடும் கலிங்கத்துப்பரணி குறித்தும் ஆய்வு செய்கிறது இந்நூல்.
கல்வெட்டியல், சோழர் கால வரலாறு ஆய்வியலில் நெடிய அனுபவம் பெற்ற நூலாசிரியரின் தொல்லிய- துல்லியப் பார்வையில் இந்நூல் வடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருணாகரத் தொண்டைமான் சிறப்புகள் குறித்து காஞ்சிபுரம் மற்றும் சோழர் காலத்தில் 'இடர்க்கரம்பை' என தமிழில் அழைக்கப்பட்ட இன்றைய ஆந்திர மாநிலம்- கோதாவரி மாவட்டம் இராஜமகேந்திரபுரம் அருகேயுள்ள திராட்சாராமம் ஆகிய இரு இடங்களில் கண்டறியப்பட்ட அரிய கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இடம்பெற்ற கல்வெட்டில் குறிப்பிடப்படும் 'சோழமண்டலத்து எயில் நாட்டு திருவத்தியூர் ஆழ்வார்' என்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் என்பது அறியப்பட வேண்டிய செய்தி.
சோழப் பேரரசனுக்கு படைத்தளபதியாக இருந்தாலும் 'வண்டை' என்ற சோழ நாட்டு நகரின் தலைவனாகவும் விளங்கியவர் கருணாகரத் தொண்டைமான். அவர் ஆண்ட வண்டை நகர், தற்போது எங்குள்ளது என்பது பற்றியும், கலிங்கப் போர் எந்த ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் என்பது பற்றியும் கல்வெட்டுகள் வழி நிறுவுகிறார் நூலாசிரியர்.
'இடர்க்கரம்பை' கல்வெட்டு வடமொழிச் செய்யுளால் அமைந்து, அது தெலுங்கு எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளது. இது தமிழாக்கம் செய்தும் நூலில் தரப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.