முகப்பு

இதயம் கவர்ந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தமிழுலகம் மறக்க முடியாத ஆளுமை. அரசியல், ஆன்மிகம், இலக்கியம், நாடகக் கலை என்று பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்தவர்.

27 வினாடிகள் முன்பு
இதயம் கவர்ந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்
பகிர்:

இதயம் கவர்ந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்- நாஞ்சில் கி. ராஜேந்திரன்; பக். 203; ரூ. 250; பவ்டா பதிப்பகம், விழுப்புரம்-605 602. ✆ 04146-240683.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தமிழுலகம் மறக்க முடியாத ஆளுமை. அரசியல், ஆன்மிகம், இலக்கியம், நாடகக் கலை என்று பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்தவர்.

குமரி அனந்தனின் இளமைப் பருவம் முதல் தீவிர அரசியலில் பயணித்தது வரையிலான முழு வரலாறு இந்த நூலில் உள்ளது. இளமைக் காலக் குறும்புகள், ஆன்மிகத்தில் தொடங்கிய அரசியல், காங்கிரஸின் முன்னணித் தலைவர்களுடனான அனுபவங்கள், மேடைப் பேச்சு அனுபவங்கள், இலக்கிய நூல்கள், சட்டப்பேரவை- மக்களவையில் பேசியதும் சாதித்ததுமான அனுபவங்கள், ஜாதி- மத வேறுபாடுகளின்றி நாட்டு மக்களுக்காகப் பாடுபட்டதால் சொந்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டது, அரசியல் ஏற்றத் தாழ்வுகள், தனிக் கட்சி அனுபவங்கள், பாதயாத்திரைகள், இலங்கைத் தமிழர் போராட்டங்கள், திராவிட இயக்கத் தலைவர்களுடான நட்பும் அரசியல் எதிர்ப்பும், தேர்தலில் வெற்றி- தோல்விகள் என குமரி அனந்தனின் மக்கள் பணிகள் வியக்க வைக்கின்றன.

Advertisement

Advertisement

மகாத்மா காந்தியின் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்தது, காமராஜருடனான அரசியல் பயணம், பண்டித நேரு குடும்பத்தினருடனான அரசியல் பயணம், 1995, 1996-ஆம் ஆண்டுகளில் நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நடத்திய தொண்டர் தரிசனம், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அடுத்த தலைவர் கே.வீ.தங்கபாலுவிடம் பொறுப்பை ஒப்படைத்தது என்ற வரலாற்று நிகழ்வுகளில் குமரி அனந்தனின் அரசியல் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

மணியார்டர் படிவம் தமிழில் இடம்பெற வேண்டும் என்று மக்களவையில் குமரி அனந்தன் பேசியதால் ஏற்பட்ட உடனடித் தீர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியது, மறைந்த முதல்வர் எம்ஜிஆருடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் உள்ளிட்ட ருசிகரத் தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.