FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழி எழுத்து வரலாறு (தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுப் பயிற்சி)

நூலில் தமிழி எழுத்து வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் ஆசிரியர், பல்வேறு எழுத்து வகைகளையும் அவற்றைச் சுட்டும் மேற்கோள் நூல்கள், ஆசிரியர்களையும் அறியத் தருகிறார்.

19 அக்டோபர் 2026, 3:08 pm IST
பகிர்:

தமிழி எழுத்து வரலாறு (தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுப் பயிற்சி) - சு. வேல்முருகன்; பக். 100; ரூ. 150; கம்பர் பதிப்பகம், புதுச்சேரி-605 004. ✆ 99943 62455.

நூலில் தமிழி எழுத்து வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் ஆசிரியர், பல்வேறு எழுத்து வகைகளையும் அவற்றைச் சுட்டும் மேற்கோள் நூல்கள், ஆசிரியர்களையும் அறியத் தருகிறார்.

2,500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் மட்கலங்களில் குறியீடுகளை வரைந்திருக்கிறான் என்று குறிப்பிட்டு, இவற்றைத் தமிழி எழுத்துகளுக்கு முன்னோடிகள் என்பதுடன், கரோஷ்டி எழுத்து, அசோகன் பிராமி எழுத்துகளும் அறிமுகம் செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

பண்டைய பிராமி எழுத்துகளையும் சொற்களையும் அடையாளம் கண்டு இனங்காட்டியவர்களைக் குறிப்பிட்டதுடன், 89 தமிழ் பிராமி கல்வெட்டுகளையும் 21 வட்டெழுத்துகளையும் பதிவு செய்த ஐராவதம் மகாதேவன் பற்றியும் தெரிவிக்கப்படுகிறது.

மூலத் திராவிட மொழிகளைப் பட்டியலிட்டதுடன், தி.ஸ்ரீ. ஸ்ரீதர் நூலிலிருந்து தமிழ்நாட்டில் தமிழி எழுத்துகள் காணப்படும் 30-க்கும் மேற்பட்ட இடங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுத்து வரலாற்றைக் கூறுகையில், தேவநாகரியையும் தென்னிந்திய திராவிட எழுத்து முறையையும் தமிழி எழுத்துகளையும் பற்றி, அரிக்கமேட்டுப் பானையோட்டில் தமிழி எழுத்துகள் இருப்பதைக் கண்டறிந்த மார்டிமர் வீலர் மற்றும் விமலா பெக்லியின் ஆய்வுகள் குறித்து நூல் விளக்குகிறது.

காசுகளில் தமிழி எழுத்துகள் பற்றியும் மாக்கோதை காசு, செழியன் காசு போன்ற சில காசுகளைப் பற்றிய விளக்கங்களையும் தமிழ்ப் பிராமி எழுத்தின் மகர வடிவம் குறித்தும் நிறைவாக எழுத்தின் பயன்கள் குறித்தும் சுருக்கமாக அறிந்துகொள்ளத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments