FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துவங்கும் பிரச்சனைகள்; முறியடிக்கும் வழிமுறைகள்!

'துவங்கும் பிரச்னைகள்; முறியடிக்கும் வழிமுறைகள்' நூலில், அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

58 வினாடிகள் முன்பு
பகிர்:

துவங்கும் பிரச்சனைகள்; முறியடிக்கும் வழிமுறைகள்! - சீத்தலைச் சாத்தன், பக். 170, ரூ. 190, புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட், பெங்களூரு, ✆ 74185 55884.

'துவங்கும் பிரச்னைகள்; முறியடிக்கும் வழிமுறைகள்' நூலில், அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப கதாபாத்திரங்களை அமைத்து அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் புத்தகத்தை வடித்துள்ளார். இதில் வரும் பெரும்பாலான கதைகள் நிகழ்கால வாழ்வில் பொருத்தி பார்க்கும் வகையில் இருப்பதால் படிக்கத் தூண்டுகிறது.

எப்படி பிரச்னைகள் உருவாகின்றன, வருமுன் அவற்றை எப்படி தடுப்பது, எப்படி முறியடிப்பது என்பதை ஒவ்வொரு கதையிலும் சூழ்நிலைக்கேற்ப விளக்கியிருப்பது சிறப்பம்சம். குழந்தையின் நியாயமற்ற ஆசைகளை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை, கண்டிக்கவில்லை என்றால் வாழ்வில் பிடிமானம் இல்லாமல் ஆகிவிடுவார்கள் என்பதை கௌரவர்களின் வாழ்க்கையைக் குறிப்பிட்டு எடுத்துரைத்திருப்பது, சமகாலத்தில் குழந்தைகளின் வளர்ப்பில் எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை 'அப்பாவின் மகன்' கதை உணர்த்துகிறது.

Advertisement

Advertisement

இதேபோல ஒரு கோயில், இப்படியும் மனிதர்கள், தப்பான கணக்கு சரியான விடை, எண்ணம்போல் வாழ்க்கை, நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும், போலி-மனிதர்களில் மட்டுமல்ல, ஒரு நாள் அகப்படுவான் ஆகிய கதைகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளதுடன் நிகழ்காலத்தில் நம்மிடையே நடக்கும் நிகழ்வுகளுடன் பொருந்துகிறது. குறிப்பாக 'துவங்கும் பிரச்சனைகளும்; முறியடிக்கும் வழிமுறைகளும்' என்ற முதல் கதையில் விரோதம்-துரோகம் ஆகியவற்றுக்கு நீர்-நெருப்பை நூலாசிரியர் உவமையாகப் பயன்படுத்தி, எவ்வாறு சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்பதை விளக்கி வாசகர்களைக் கவர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments