வாகை சூட வா!
வாகை சூட நினைக்கும் அனைவரின் கைகளிலும் தவழ வேண்டியது 'வாகை சூட வா'.
வாகை சூட வா! - முனைவர் மா.முரளி; பக்: 142; ரூ.200; இலக்கியா பதிப்பகம், தமிழூர், தென்காசி மாவட்டம், ✆ 9940770433.
"வாகை சூட வா' பெயருக்கேற்ப வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் செயல் வடிவம் அளிக்கும் வகையில் இந்நூலை வடித்திருக்கிறார் ஆசிரியர். நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் எந்த ஓர் இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் சுருக்கமாகவும், அதேசமயம் ஆழ்ந்த கருத்துகளையும் கொண்டுள்ளதால் படிக்கத் தூண்டும் வகையில் இருப்பது சிறப்பம்சம்.
ஒரு குறிப்பிட்ட நிகழ்வாக மட்டுமில்லாமல் கலை, இலக்கியம், அறிவியல், வரலாறு, சாதனைகள் என வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நிகழ்வுகளையும் தொகுத்து எளிய மொழிநடையில் வழங்கப்பட்டுள்ள இந்த நூலில் இடம்பெற்றுள்ள 125 கட்டுரைகளும் தனிச்சிறப்பு கொண்டவை.
Advertisement
Advertisement
ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும், போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற சிறிய ஒரு தாமதம் செயலுக்கான தடையை ஏற்படுத்தும். அந்தத் தடையை உடைத்தெறியும் வகையிலான உத்வேகம், செயல் வடிவம் அளிக்கும் வகையில் கட்டுரைகள் இருப்பது நூலுக்கான கூடுதல் பலம்.
குண்டூசி, சாதகப் பறவை, பாரதியின் எண்ணம், மன்னியுங்கள், நோக்கம் தீர்மானி, ஜீரோ ஹீரோவான கதை, கிணற்றுத் தவளை, வலிமையான ஆயுதம், அம்பானியின் நிஜக்கதை, மரணம்,
தலைமைத்துவம், தர்மம் என ஒவ்வொரு கட்டுரையும் எண்ணங்கள் எண்ணங்களாக மட்டுமில்லாமல் செயலாக மாற வேண்டும் என்ற தாக்கத்தை மனதில் விதைக்கிறது.
குடித்தால் மண்ணைத் தொடாத மழைநீரை மட்டும்தான் குடிப்பேன், இல்லையென்றால் மரணிப்பேன் என்ற சாதகப் பறவையின் வைராக்கியம், கொள்கைப்பிடிப்பு, வெற்றி வேண்டும் என்றால் தர்மம் செய்ய தாமதிக்கக்கூடாது, வெற்றியை தர்மம் கொடுக்கும் என்ற தர்மத்தின் பலன், வெற்றிக்கு தேவை தொடர் முயற்சியும், பயிற்சியும் என்பதை உணர்த்தும் குத்துச்சண்டை வீரர் முகமது அலியை தோற்கடித்தவரின் நம்பிக்கை உள்ளிட்ட கட்டுரைகள் வெற்றியை அலங்கரிக்கும் மூலாதாரங்கள். வாகை சூட நினைக்கும் அனைவரின் கைகளிலும் தவழ வேண்டியது 'வாகை சூட வா'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.