சங்க இலக்கியத்தில் வேந்தர்
இந்த நூலில் சங்க இலக்கியங்களில் வேந்தர்கள், ஆட்சி முறை, அடையாளங்கள், அவர்களின் சிறப்புப் பண்புகள் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியத்தில் வேந்தர் - அரங்க. இராமலிங்கம்; பக்.424; ரூ.500; முல்லை பதிப்பகம், சென்னை- 600 040. ✆ 98403 58301.
இந்த நூலில் சங்க இலக்கியங்களில் வேந்தர்கள், ஆட்சி முறை, அடையாளங்கள், அவர்களின் சிறப்புப் பண்புகள் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
'வேந்தன்' என்னும் பெயர் 'வேய்ந்தோன்' என்பதன் மரூஉ. வேய்தலாவது முடியணிதல், முடியணியும் முத்தமிழரசரையும் முடியுடை மூவேந்தர் என்று கூறுவது மரபு என்னும் உண்மையை உறுதிப்படுத்த புறநானூற்றை நூலாசிரியர் பயன்படுத்தி உள்ளார்.
Advertisement
Advertisement
ஒவ்வொரு இயலிலும் வகுத்துக் கொண்ட சிறிய தலைப்புகள், அணுகுமுறையில் இவருக்குள்ள தெளிந்த சிந்தனையைக் காட்டுகின்றன. அரசன்/அரசர், இறை/இறைவன், காவலன்/காவலர், மன்னன்/மன்னர், வேந்தன்/ வேந்தர் ஆகிய சொற்களுக்குரிய இயல்பான பொருள் சூழல், சிறப்புப் பொருள் ஆகியவற்றை உரிய மேற்கோளுடன் விளக்குவதுடன், புதுமைப் பொருள் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். நுனிப்புல்லாய் அறிந்தவற்றை, ஆய்வுப் பார்வையுடன், பல்வேறு இலக்கியப் பாடல்களின் சான்றுகள் வழியாக 'வேந்தரை' விளக்கியுள்ளார்.
'வேந்தரும் புலவரும்' என்ற இயலில் வேந்தர், புலவரைப் போற்றிய நிலை, வேந்தர் பால் புலவர் கொண்டிருந்த உணர்ச்சியொத்த நட்பு, நல்லது கண்டபோது பாராட்டியும், தீயது கண்டபோதும் கடிந்துரைக்கும் அறநெறி புகட்டும் புலவரின் பண்புநலனும், 'புலவராக விளங்கிய வேந்தர்' என்ற இயலில் வேந்தரின் புலமை நலமும், அவரது புலமை நலத்தால் புலப்படும் பண்பு நலமும் ஆராயப் பெற்றுள்ளன.
'வேந்தரும் போரும்' என்ற இயலில் 'வீரவூழி', போருக்கான காரணம், போரில் புலவரின் பணி, போருக்கு முன், பின் நிகழ்வுகள், போரால் ஏற்பட்ட விளைவுகள், நடுகல் முதலியவை ஆராயப்பட்டுள்ளன.
'வேந்தரும் ஆட்சியும்' என்ற இயல் வேந்தரின் ஆட்சி, ஆட்சிக்குரிய உறுப்புகள், அவற்றின் செயல்முறை, வேந்தரின் அக- புறவாழ்வு, பிறந்த நாள் விழா ஆகியவையும் ஆராயப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.