FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காலத்தை வென்ற சங்ககாலம்

சங்கப் பாடல்களை வெறும் இலக்கியமாக அல்லாமல், வாழ்வியல் கோட்பாடாக விவரித்துச் சொல்கிறது இந்த நூல்.

பகிர்:

காலத்தை வென்ற சங்ககாலம்-டாக்டர் கு. முத்துராசன்; பக். 538; ரூ. 680; வசந்தா பிரசுரம், சென்னை-600 033, ✆ 90948 75747.

சங்கப் பாடல்களை வெறும் இலக்கியமாக அல்லாமல், வாழ்வியல் கோட்பாடாக விவரித்துச் சொல்கிறது இந்த நூல்.

12 இயல்களாக விரியும் இந்த நூல் தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை என சங்க இலக்கியங்கள் அனைத்தையும் உள்ளடக்கி, இறுதியில் சங்க காலச் சமூகம், பொருளாதாரம், குடும்ப ஒற்றுமை என வாழ்வியலை விரிவாகப் பேசுகிறது.

Advertisement

Advertisement

தொல்காப்பியம் குறித்த நூலாசிரியரின் பார்வை மிகவும் ஆழமானது. தொல்காப்பியர் மனிதனை மட்டும் ஆறறிவு உடையவனாகக் கூறாமல், உலக உயிர்களை எல்லாம் ஓரறிவு முதல் ஆறறிவு வரை பகுத்துக் காட்டியது தமிழனின் அறிவியல் பார்வைக்குச் சான்று என்பதை ஆதாரங்களுடன் விளக்கிச் செல்கிறார்.

இன்று உலகமயமாக்கல், உலகக் கிராமம் (குளோபல் வில்லேஜ்) என்று நாம் பேசுகிறோம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பாடிவிட்டார்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றெல்லாம் சங்கப் புலவர்கள் பாடியது இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை அறிக்கையைவிட உயர்ந்தது என்று ஆசிரியர் சுட்டிக்காட்டும் இடம், சங்க இலக்கியத்தின் பொதுமைப் பண்பை உலக அரங்கில் நிறுத்துகிறது.

அதேபோல சங்க காலத்தில் ஒழுக்கமே உயிரினும் மேலாகக் கருதப்பட்டதையும், அக இலக்கியங்களில் காணப்படும் காதலின் மென்மையையும், குடும்ப ஒற்றுமையையும், புற இலக்கியங்களில் காணப்படும் உழவின் பெருமையையும், விருந்தோம்பலையும் இணைத்து இந்நூல் பேசுகிறது.

சில இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் திருத்தி, இன்னும் செம்மையான வடிவில் இந்த நூல் வெளிவர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments