அவரவர் நியாயங்கள்
நடைமுறை வாழ்க்கையில் ஆயிரம் பிரச்னைகள் வந்தாலும், போராடி வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையை உணர்த்தும் இந்தச் சிறுகதைகள் வாசிப்போருக்கு நல்லதொரு அனுபவத்தை அளிக்கும்.
அவரவர் நியாயங்கள்- எஸ்ஸார்சி; பக்.136; ரூ.180; நாற்கரம், சென்னை- 600 073. ✆ 95510 65500.
எழுத்தாளரான நூலாசிரியரின் 13-ஆவது சிறுகதை தொகுப்பு இது. பல்வேறு இதழ்களின் வெளியான 16 சிறுகதைகளை அவர் தொகுத்து நூலாக்கியுள்ளார். ஒவ்வொரு கதையும் படிக்கப் படிக்கச் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதுடன், நல்லதொரு சிந்தனைகளையும், உண்மைகளையும், எதிர்பாராத திருப்பங்களையும் உணர்த்துவதை அறிவதில் நூலாசிரியர் வெற்றி கண்டுள்ளார்.
காதல் திருமணம் செய்துகொண்டு சென்ற மகள் கணவரை இழந்து சில ஆண்டுகளில் வீடு திரும்ப, அவளுக்கு பெற்றோர் மறுமணம் செய்துவைக்கும் 'பிரம்ம முடிச்சு', பெண்களின் பிரச்னைகளை அலசும் 'பெண் பாவம்', 'நம் நிழல் நம்மோடு', நண்பர்களிடையேயான பாசத்தைத் தத்ரூபமாய் வெளிக்கொணரும் 'பிசகு', 'பரஸ்பரம்', மகனின் வீட்டில் திருடு போனதை நாளிதழில் அறிந்து ஓடிடோடி பாசத்துடன் செல்லும் 'பாவம் அப்பா', பெண் பார்க்கச் சென்ற வீட்டில் இளைஞனை தனியே அழைத்து தன் காதலனுக்கு வேலைப் போட்டுக் கொடுக்கச் சொல்லும் 'நினைப்பும் பிழைப்பும்', மனைவியின் முறையற்ற நட்பை அறிந்த கணவன் தனது மகளுக்குத் திருமணம் முடித்துவிட்டு, அடுத்த நாள் மனைவியை வழியனுப்பிவைத்து கங்கையில் அடித்துச் செல்லப்பட்டாள் என்று கூறும் 'அவரவர் நியாயங்கள்', குடும்பக் கடன் பிரச்னையை மையப்படுத்தும் 'தீராக்கடன்', வாடகை வீட்டுப் பிரச்னைகளை அலசும் 'சொல்', மனைவியின் மூட்டு வலி பிரச்னையுடன் கணவன் போராடும் 'சந்திராஷ்டமம்', வீட்டில் பேரனின் சைக்கிள் காணாமல் போனதை விளக்கும் 'களவும் ஒரு கலை', கடவுள் நம்பிக்கையை ஆராதிக்கும் 'கண்ணைக் கெடுத்த தெய்வம்', வீட்டுக் குடித்தனப் பிரச்னையை விவரிக்கும் 'எல்லாம் புரியணுமா?', குடும்ப உறவை மையப்படுத்தும் 'சங்கு சுட்டாலும்' என்ற சிறுகதைகள் அபாரம்தான்.
Advertisement
Advertisement
நடைமுறை வாழ்க்கையில் ஆயிரம் பிரச்னைகள் வந்தாலும், போராடி வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையை உணர்த்தும் இந்தச் சிறுகதைகள் வாசிப்போருக்கு நல்லதொரு அனுபவத்தை அளிக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.