நானும் இன்ட்ரோவர்ட்தான் (சமூக- உளவியல் கட்டுரைகள்)
உடலும், மனமும் நலமுடன் உயிர் வாழ முடியும் என்பதை மையப்படுத்தி இந்த நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர்.
நானும் இன்ட்ரோவர்ட்தான் (சமூக- உளவியல் கட்டுரைகள்) - ஜெயஸ்ரீ கண்ணன்; பக். 232; ரூ. 350; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-600 083. ✆ 96003 98660.
உடலும், மனமும் நலமுடன் உயிர் வாழ முடியும் என்பதை மையப்படுத்தி இந்த நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர்.
'நானும் இன்ட்ரோவர்ட்தான்' (உள்முகச் சிந்தனையாளர்) என்று பிரகடனப்படுத்திக் கொள்வோரில் பலர் அதைக் கடைப்பிடிப்பதில்லை என்று கூறும் நூலாசிரியர் அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள் படும் இன்னல்கள் அறிவியல், மருத்துவ ரீதியில் உளவியல் தொடர்பான சிக்கல்கள், நோய்கள், சந்தேகங்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
Advertisement
Advertisement
குடும்பச் சூழல், பணிச்சூழல், துக்கம், துயரம், மகிழ்ச்சி போன்ற பல்வேறு பிரச்னைகளால் மனச் சோர்வு, கவலை, மன அழுத்தம் என்று மூன்று வகைகளில் மனிதர்கள் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும், அந்தப் பிரச்னைகளின் வகைகள், முறைகள், அறிதல், சிகிச்சை முறை போன்றவற்றை தெளிவாக விளக்குகிறார்.
தேர்வு முறை, அலுவலகச் சூழல், காதல், நேர மேலாண்மை, முடிவெடுக்கும் திறன், ஆளுமைக் கோளாறுகள், சந்தேகம், தனிமையில் இனிமை, நேர்மை, அதி ஒழுங்கு, கவலை, மனச் சோர்வு, கவனச் சிதறல், மிகை இயக்க ஆற்றல், இருமுனையப் பிறழ்வு, உண்ணும் கோளாறு, கடந்த கால வாழ்க்கையில் வாழ்தல், மனச்சிதைவு, மூளை அழுகல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நம் உடனிருப்போரை அறியும் வகையில் இந்த நூல் வழிகாட்டுகிறது.
படிக்கப் படிக்க இது போன்ற பிரச்னைகளில் அவதிப்படுவோரின் முகம் கண் முன் நிழலாடும் அளவுக்கு அவர் எளிய நடையில் புரிய வைத்துள்ளார். இத்துடன் மனநலப் பிரச்னைகளுக்கான காரணங்களை முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வரும் காட்சிகளுடன் உரிய விளக்கத்தை அவர் அளித்திருப்பது வியக்க வைக்கிறது. யோகா, தியானம், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.