வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள்
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் சனிக்கிழமை சிறப்பு தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் சனிக்கிழமை சிறப்பு தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமது சதாபிஷேகத்தின்போது வருகை புரிந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை வரதராஜபெருமாள் கோயிலுக்கு வந்த ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளுக்கு கோயில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருந்தேவி தாயாரை வணங்கினார். தொடர்ந்து வரதராஜ பெருமாளின் மங்களாசாசனம் கண்டருளினார். இதைத் தொடர்ந்து நரசிம்மர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தார். அங்கு கோயில் நிர்வாக அலுவலர் தியாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.