இன்று வில்வ தளத்தை பறிக்கக்கூடாது ஏன்?
இன்றைய தினம் வில்வம் பறித்து சிவபெருமானுக்கு சாத்தலாமா? என்றால் கட்டாயம்....
இன்று திங்கட்கிழமையன்று திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில் வரும் மாபெரும் பிரதோஷம்.
இது, பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தை மாத சோமவார பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்து வழிபட்டால், வாழ்வில் தடைகளையெல்லாம் தகர்ந்துவிடும்.
இன்றைய தினம் வில்வம் பறித்து சிவபெருமானுக்கு சாத்தலாமா? என்றால் கட்டாயம் பறிக்கக்கூடாது. ஏன் இன்று வில்வ தளத்தை பறிக்கக் கூடாது என்று பார்ப்போம்.
Advertisement
Advertisement
வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ தளம் லட்சம் தங்க மலர்களுக்கு சமமாகும். ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணித்தாலும் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகுமாம். அவ்வளவு மகிமை வாய்ந்த வில்வ தளத்தை சில நாட்களில் பறித்தால் பாவம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
எந்த நாட்களில் வில்வ தளத்தை பறிக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்......
மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. பிரதோஷம் அன்றும் வில்வத்தைப் பறிக்காமல், முன்கூட்டியே பறித்து வைத்து உபயோகிக்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.