சயன திருக்கோலத்தில் ஆதிகேசவப் பெருமாள்
வைகுண்ட துவாதசியையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் புதன்கிழமை சயன (ரங்கநாதர்) திருக்கோலத்தில்
வைகுண்ட துவாதசியையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் புதன்கிழமை சயன (ரங்கநாதர்) திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில், ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக காட்சியளிக்கிறார். இக்கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி, புதன்கிழமை உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் தங்க மண்டபத்தில் சயன (ரங்கநாதர்) திருக்கோலத்தில் காட்சியளித்தார். இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஆதிகேசவப் பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளிப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டுச் சென்றனர். இதேபோல் உற்சவர் ராமாநுஜருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, மதியம் திருமஞ்சனமும், இரவு சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.