திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.15 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.15 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.15 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 3.15 கோடி வசூலானது.
ரூ. 6 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். அதன்படி, திங்கள்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 3 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.