திருப்பதி ஏழுமலையானுக்கு உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட கீரிடம், மாலைகள் நன்கொடை (விடியோ)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருமஞ்சனத்திற்காக..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருமஞ்சனத்திற்காக உலர் பழங்களைக் கொண்ட மாலைகள், கிரீடங்களை திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஒன்பது நாள் நடைபெறும் திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த செப்.13-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, காலை - மாலை என தினமும் ஒரு வாகனத்தில் தயாருடன் மலையப்பசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையானுக்கு தினமும் பிற்பகலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, இன்று நடைபெறும் திருமஞ்சனத்தில் மலையப்பசுவாமியை அலங்கரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் உலர் பழங்களை கொண்ட கிரீடம் மற்றும் மாலையை திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் ரூ.5 லட்சம் செலவில் பிரத்யேகமாக தயார் செய்து தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.