தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-ம் ஆண்டு பெருவிழா தொடக்கம்!
தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழா பற்றி..
புதுச்சேரியில் உள்ள பழமைவாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
விழாவையொட்டி காலையில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் இராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பசிலிக்கா அதிபர் பிச்சைமுத்து, துணை பங்குதந்தை வின்சென்ட், ஆன்மிக தந்தை ஆரோக்கியநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Advertisement
Advertisement
பின்னர், ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக பசிலிக்காவை சுற்றியுள்ள வீதிகளில் பவனியாகக் கொண்டு வரப்பட்டு பின்னர் பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆலய கொடிமரத்தில் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நவ நாள்களில் காலை மாலை இரு வேலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். தொடர்ந்து 14-ம் தேதி ஆடம்பர தேர்த் திருவிழாவும், 15-ம் தேதி கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.