FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் குறித்து....

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம். - படம்: தினமணி
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு சிவகாமி அம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக். 26-ம் தேதி திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக்கோட்டம் உடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

Advertisement

Advertisement

இந்தச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறறது.

நவ. 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. கீழரதவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக கீழாதவீதியில் உள்ள தேர் நிலையை அடைந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் கோயிலில் மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

நவ.4-ம் தேதி பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்பாளுக்கும் மகாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. நவ.5-ம் தேதி இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யான உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

summary

The chariot procession of Goddess Sivakami Amman, part of the Aippasi Pooram festival at the Sri Sivakami Amman Temple—located within the Chidambaram Natarajar Temple complex—took place on Tuesday. A large number of devotees participated by pulling the chariot’s rope.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments