FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

4,000 பொம்மைகள்… ஒரே இடத்தில் முப்பெரும் தேவியர்! சென்னையில் பிரம்மாண்ட நவராத்திரி கொலு!

முப்பெரும் தேவியரின் அருளுடன் 4,000 பொம்மைகள் கொண்ட பிரம்மாண்ட நவராத்திரி கொலு பற்றி..

நவராத்திரி கொலு
பகிர்:

நவராத்திரி கொலு என்பது வெறும் பொம்மைகளை அடுக்கி வைப்பது மட்டுமல்ல. தெய்வ வழிபாடு, கலை, பக்தி, விருந்தோம்பல், பெண்களின் சமூகப் பங்கேற்பு மற்றும் குழந்தைகளின் கலாசாரப் பழக்க வழக்கங்களை ஒன்றாக இணைக்கும் அழகான பாரம்பரிய திருவிழா.

தமிழகத்திலேயே மும்பெரும் தேவியரும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கும் கோயில் சென்னையில் உள்ள அருள்மிகு நவராத்திரி திருக்கோயில். இக்கோயிலில் நவராத்திரின் பத்து நாள்களும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

அருள்மிகு ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் திருவருள் துணைகொண்டு இத்திருக்கோயில் சிறப்பாக அமைந்துள்ளது. இக்கோயிலில் நவராத்திரி விழா பிரம்மாண்டமாகவும், விமரிசையாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்தாண்டு நவராத்திரி திருக்கோயில் நிகழும் பராபவ வருடம், புரட்டாசி 24-ம் நாள் (11.10.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு 12-வது வருட நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழாவைத் தேவி குகயோகி அருளாளர் புண்ணியகோட்டி மதுரை முத்து சுவாமிகள் கொடியேற்றி துவக்கி வைக்கிறார்.

அக்டோபர் 11 முதல் 20 வரை நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் 9.00 மணிக்கு அபிஷேகமும் மாலை 6.00 மணிக்கு அம்பாளை மிகச் சிறப்பாக அலங்கரித்து கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்து தூப தீப ஆராதனைகளும் நடைபெறும்.

கொலு கண்காட்சியின் சிறப்பு

12-ஆம் ஆண்டாக நடைபெறும் இத்திருக்கோயிலின் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சியில் சுமார் 4 ஆயிரம் பொம்மைகள் இடம்பெற உள்ளன.

கொலு கண்காட்சி பொம்மைகள் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களிலிருந்து மற்றும் துபை, தாய்லாந்து, எகிப்து போன்ற நாடுகளிலிருந்தும் நேரடியாகச் சேகரிக்கப்பட்டு கொலு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல பொம்மைகள் இத்திருக்கோயிலிலேயே ஸ்தபதிகளால் உருவாக்கம் செய்யப்பெற்று இக்கண்காட்சியை அலங்கரிக்கின்றது.

நவராத்திரி திருக்கோயிலின் சிறப்புகள்

தமிழகத்திலேயே ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சக்தி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் சரி நிகர் சமமாய் ஒரே கருவறையில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே திருக்கோயில்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று மாலை 6.30 மணிக்கு முப்பெரும் தேவியருக்கு காய்கறி பழ பந்தல் அமைத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

அதோடு, பிரதி மாதமும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானுக்கு சர்வாபிஷேகம் நடைடெபறும். தேய்பிறை, வளர்பிறை பஞ்சமியில் வராஹி அம்மனுக்கும் சகல விதமான அபிஷேகமும் நடத்தப்படுகிறது.

அதுமட்டுமன்று, ஆங்கில மாதப் பிறப்பில் முப்பெரும் தேவியருக்கு மாலை 6.30 மணியளவில் குங்கும அர்ச்சனையும், கிருத்திகையில் முருகப்பெருமானுக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சர்வாபிஷேகம், வியாக்கிழமைகளில் சீரடி சாய்பாபாவிற்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் பால் அபிஷேகமும் செய்யலாம்.

கொலு கண்காட்சி

காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொலு கண்காட்சி நடைபெறும்.

குறிப்பு: பக்தர்கள் கொலு கண்காட்சிக்கு மாலை நேரங்களைத் தவிர்த்து பகல் நேரங்களில் வந்தால் பொறுமையாகக் கண்டு ரசிக்கலாம். பகல் நேரங்களில் மட்டுமே (மாலை 5 மணி வரை) புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு.

முகவரி

ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆலயம்,

எண். 21, 36-வது தெரு,

ஜி.கே.எம் காலனி,

பட்மேடு, சென்னை - 82

ஆன்மிக அன்பர்கள் அனைவரும் கொலு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முப்பெரும் தேவியரின் திருவருளைப் பெற்றுச் செல்லுங்கள்.

Navaratri Golu in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments