FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காஞ்சிபுரம் கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்! இன்று முதல் அமல்!

இனி தினமும் 100 பக்தர்களுக்கு அறுசுவை உணவு..

25 வினாடிகள் முன்பு
அன்னதானம்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை மண்டலத்தின் கீழ் உள்ள 31 புகழ்பெற்ற திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நாள்தோறும் 50 பக்தர்களுக்கு மதியம் அறுசுவை அன்னதான திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது.

அன்னதான்த்தில் கூடுதல் எண்ணிக்கை கொண்டு வர வேண்டும் எனப் பக்தர்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று முதல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில், ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் மற்றும் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களில் அன்னதானத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நபர்கள் இணைக்கப்பட்டு நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் நடைபெற்ற நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சித்ராதேவி பங்கேற்று அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்வில் அறங்காவலர் ஜெகநாதன், செயல் அலுவலர்கள் சீனிவாசன் கதிரவன் அமுதா பூவழகி, ஆய்வாளர் கிருத்திகா, ராமகிருஷ்ணன், தவெக மாநகர நிர்வாகிகள் மதன், மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments