தஞ்சை பெரிய கோயிலில் சதய விழா: குதிரைகள் பூட்டிய ரதத்தில் ராஜராஜசோழன் நகர்வலம்!
குதிரைகள் பூட்டிய ரதத்தில் நகர்வலம் வந்த ராஜராஜசோழன்.
தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1041 ஆவது சதய விழா முன்னிட்டு, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சியோடு முக்கிய வீதிகள் வழியாக ராஜராஜசோழன் நகர்வலம் வந்தார்.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா அரசு விழாவாக இன்றும் நாளையும் (அக். 21, 22) இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், பட்டிமன்றம், 1,041 நடன கலைஞர்களின் நாட்டியாஞ்சலி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்த விழாவினை முன்னிட்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் நகர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருந்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சியோடு முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்த சோழ மன்னனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
தொடா்ந்து, திருமுறை இன்னிசை, கலை நிகழ்ச்சிகள், பரதம், நாட்டுப்புற நிகழ்ச்சி, நடனம், இன்னிசை நிகழ்ச்சி, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர் மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் 1041 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதையடுத்து, இரவு 7 மணிக்கு கவிதா ஜவஹரின் சொற்போரும், திருவாரூர் புலவர் இரெ. சண்முகவடிவேல் தலைமையில் பட்டிமன்றமும், 8.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகளும், 9.30 மணிக்கு ராசி. மணிவாசகத்தின் கற்றளி கண்ட சிவபாத சேகரன் என்ற தலைப்பில் இராஜராஜசோழன் வரலாற்று நாடகமும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து, வியாழக்கிழமை (அக்.22) காலை 7.30 மணிக்கு மங்கள இசையும், தொடா்ந்து திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதலும், 8 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சார்பில் மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து திருமுறை வீதி உலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தருமபுர ஆதீனம் சார்பில் பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடும் நடைபெறவுள்ளன.
On the occasion of the 1041st centenary celebration of the great Maharaja Rajaraja Chola at the Thanjavur Great Temple, Rajaraja Chola marched through the main streets from the Thanjavur Palace complex with a performance by hundreds of folk artists.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.