FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பந்துவீச்சு பரிசோதனை: சென்னை வந்தார் தரிந்து கௌஷல்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் தரிந்து கௌஷல் பந்துவீச்சு பரிசோதனைக்காக திங்கள்கிழமை சென்னை வந்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் தரிந்து கௌஷல் பந்துவீச்சு பரிசோதனைக்காக திங்கள்கிழமை சென்னை வந்தார்.
 அண்மையில் முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் தரிந்து கௌஷலின் பந்துவீச்சு சந்தேகமளிப்பதாக போட்டி நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இந்த மாத தொடக்கத்தில் புகார் அளித்தனர்.
 இதனால் அவர், தனது பந்துவீச்சு சரியானது தான் என்பதை 14 நாள்களுக்குள் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இந்நிலையில், கௌஷல், திங்கள்கிழமை சென்னை போரூரில் உள்ள ஐசிசியின் அங்கீகரிக்கப்பட்ட பந்துவீச்சு பரிசோதனை மையத்துக்கு வந்து தனது தனது பந்துவீச்சை ஆய்வுக்கு உட்படுத்தினார்.
 இந்த பரிசோதனை 2 மணி நேரம் நடந்தது. பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அவர் விமானம் மூலம் இலங்கை திரும்பினார். இரண்டு வார காலத்துக்குள் பரிசோதனை முடிவுகள் ஐசிசிக்கும், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments