குவாங்ஜு ஓபன்: சானியா ஜோடி சாம்பியன்!
இப்போட்டியின் முடிவில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
குவாங்ஜு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.
சீனாவின் குவாங்ஜுவில் டபிள்யூ.டி.ஏ டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் ஷிலின் சு - ஜியோடி யூ ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முடிவில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இந்த ஜோடி, இந்த வருடம் 6 போட்டிகளை வென்றுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.