முகப்பு
விளையாட்டு

ஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு

ஐபிஎல் 15வது பருவத்தின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ்  பேட்டிங்கை தேர்வு செய்தது.

Updated On : 29 மே 2022, 8:20 pm IST
பகிர்:

ஐபிஎல் 15வது பருவத்தின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் 15வது பருவத்தின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சினைத் தேர்வு செய்தார். 

கடந்த 2008-க்கு பின் தற்போது தான் ராஜஸ்தான் அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. ஆனால் அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குஜராத்.

Advertisement

Advertisement

2008ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியின் வீரர்களை கெளரவப்படுத்த அப்போதைய அணியில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு நடப்பாண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முனாப் பட்டேல், யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, ஷேன் வாட்சன், சித்தார்த் திரிவேதி ஆகியோருக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் குஜராத் 14 ஆட்டங்களில் 10 வெற்றியுடன் 20 புள்ளிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 14 ஆட்டங்களில் 9 வெற்றியுடன் 18புள்ளிகளையும் பெற்று முதலிரண்டு இடங்களைப் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments