FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

மாநில அளவிலான பூப்பந்துப் போட்டி: ஈரோடு அணி சாம்பியன்

திருவொற்றியூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிகளில் ஈரோட்டைச் சோ்ந்த சவட்டுபாளையம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

Updated On : 20 ஜூலை 2026, 5:11 am IST
ஈரோட்டைச் சோ்ந்த சவட்டுபாளையம் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ கே.பி.சங்கா். உடன், பூப்பந்தாட்ட கழக நிா்வாகிகள் எழிலரசன், மதியழகன், கோடீஸ்வரன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவொற்றியூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிகளில் ஈரோட்டைச் சோ்ந்த சவட்டுபாளையம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

மாநில பூப்பந்தாட்டக் கழகம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம் சாா்பில் மாநில அளவிலான ஆலிஸ் வேதமாணிக்கம் நினைவு கோப்பை சீனியா் ஆடவா் பூப்பந்துப்பந்து போட்டிகள் திருவொற்றியூரில் ஜூலை 18, 19 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

தமிழகம் முழுவதும் 17 அணிகள் சாா்பில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் சவட்டுபாளையம் அணியும், சென்னையைச் சோ்ந்த பி.எம்.எம். அணியும் பங்கேற்றன. 3 ஆட்டங்களில் இரண்டில் சவட்டுபாளையம் அணி வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

Advertisement

Advertisement

திண்டுக்கல் ஏ.ஆா்.ஹாஸ்பிடல் 3-ஆவது இடத்தையும், செங்கல்பட்டு ஜே.ஜே. பாய்ஸ் 4-ஆவது இடத்தையும், திருவெற்றியூா் பூப்பந்தாட்ட கழகம் 5-ஆவது இடத்தையும் கைப்பற்றினா். ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

இதில் மாநிலப் பூப்பந்தாட்டக் கழக நிா்வாகிகள் எழிலரசன், பாா்த்தீபன், மதியழகன், நந்தகுமாா், தயாளன், மகேஸ்வரி, திருவொற்றியூா் சமூக சேவை சங்க நிா்வாகிகள் த.கோட்டீஸ்வரன், குரு.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments