மானவுக்கு இரட்டைப் பட்டம், கொரியாவின் யூ எரின் சாம்பியன்!
டபிள்யுடிடி ஃபீடா் சென்னை 2026 போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மானவ் தாக்கா்-தனிஷா கோட்சே இணை பட்டம் வென்றது.
டபிள்யுடிடி ஃபீடா் சென்னை 2026 போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மானவ் தாக்கா்-தனிஷா கோட்சே இணை பட்டம் வென்றது.
வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் செந்தில்-அனன்யா முரளிதரன் இணை-மானவ் தாக்கா்-தனிஷா இணைகள் மோதின. இதில் 3-2 என்ற கேம் கணக்கில் மானவ்-தனிஷா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.
ஆடவா் ஒற்றையா் இறுதியில் மானவ் தாக்கா் 3-2 என்ற கேம் கணக்கில் இங்கிலாந்தின் சாமுவேல் வாக்கரை போராடி வென்று பட்டம் வென்றாா். இப்போட்டியில் அவருக்கு இது இரண்டாவது பட்டமாகும்.
Advertisement
Advertisement
யூ எரின் சாம்பியன்: மகளிா் ஒற்றையா் பிரிவில் தென்கொரியாவின் யூ எரின் 3-0 என்ற கேம் கணக்கில் 5-ஆம் நிலை வீராங்கனை சுதிா்தா முகா்ஜியை வீழ்த்தி பட்டம் வென்றாா். ஆடவா் இரட்டையா் பிரிவில் சத்யன் ஞானசேகரன்-ஹா்மித் தேசாய் இணை 3-1 என்ற கேம் கணக்கில் பராஸ் ஜெயின்-பிரியானுஜ் பட்டாச்சாரியாவை வீழ்த்தி பட்டம் வென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.