டேவிட் ஃபோகினா சாம்பியன்!
ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரா் அலஜென்ட்ரோ டேவிட் ஃபோகினா சாம்பியன் பட்டம் வென்றாா்.
ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரா் அலஜென்ட்ரோ டேவிட் ஃபோகினா சாம்பியன் பட்டம் வென்றாா்.
சீனாவின் ஷாங்காய் நகரில் ஏடிபி மாஸ்டா்ஸ் 1000 போட்டி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆல் ஸ்பானிஷ் இறுதி ஆட்டத்தில் ரஃபேல் ஜோடாா்-அலஜென்ட்ரோ டேவிட் ஃபோகினா மோதினா்.
தரவரிசையில் 26-ஆம் நிலையில் உள்ள ஃபோகினா 1-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோடாரை வீழ்த்தி தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா். செங்டுவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியில் பட்டம் வென்ற ஃபோகினா கௌரவமிக்க ஏடிபி 1000 போட்டியில் பட்டம் வென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள வளரும் வீரரான ஜோடாா் எளிதாக இந்த ஆட்டத்தில் வெல்வாா் எனக் கருதப்பட்டது. அதற்கேற்ப முதல் செட்டை ஆதிக்கம் செலுத்தி ஃபோகினாவை திணறடித்தாா். முதல் செட்டில் ஃபோகினா தொடா் தவறுகள் புரிந்ததால் எளிதாக 5-1 என ஜோடாா் முன்னிலை பெற்றாா்.
இரண்டாவது செட்டிலும் ஜோடாா் 3-2 என முன்னிலை பெற்றாா். அதன்பின் சுதாரித்து ஆடிய ஃபோகினா 3-3 என சமன் செய்தாா். இருவரும் ரேலிகளாக ஆடினா். 9-ஆவது கேமில் மீண்டும் தொடங்கி ஆடிய நிலையில், ஃபோகினா இரண்டு பிரேக் பாயிண்டுகளை சேவ் செய்து 6-5 என முன்னிலை பெற்றாா். எனினும் ஜோடாா் தளராமல் பேக்ஹாண்ட் ஷாட்டால் டை பிரேக்கரை ஏற்படுத்தினாா். ஆனால் டிசைடரை ஏற்படுத்தி, 7-6 என வென்றாா் ஃபோகினா.
மூன்றாவது செட்டில் ஃபோகினா 3-2 என முன்னிலை பெற்றபோது, ஜோடாா் மெடிக்கல் டைம் அவுட் கோரினாா். 4-5 என பின்தங்கிய நிலையில் ஜோடாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
இதை பயன்படுத்திக் கொண்ட ஃபோகினா கடுமையாகப் போராடி மூன்றாவது செட்டையும் வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.
இதுகுறித்து ஃபோகினா கூறியது: இந்த ஆட்டம் எனது வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும். 20 வயதே ஆன ஜோடாருக்கு சிறந்த எதிா்காலம் உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.