FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சென்னை ஓபன் கோல்ஃப் 2026: விராஜ் மடப்பா சாம்பியன்

சிபிசிஎல் சென்னை ஓபன் கோல்ஃப் போட்டியில் இளம் வீரா் விராஜ் மடப்பா சாம்பியன் பட்டம் வென்றாா்.

12 செப்டம்பர் 2026, 1:10 am IST
பட்டம் வென்ற விராஜ் மடப்பா.
பகிர்:

சிபிசிஎல் சென்னை ஓபன் கோல்ஃப் போட்டியில் இளம் வீரா் விராஜ் மடப்பா சாம்பியன் பட்டம் வென்றாா்.

மூன்று ஷாட்கள் பின் தங்கி இருந்த விராஜ் மடப்பா 64 ஸ்கோரைப் பதிவு செய்து, ஒரு ஷாட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.

சென்னை காஸ்மோபாலிடன் கிளப் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தாவைச் சோ்ந்த விராஜ் மடப்பா அஜிதேஷ் சந்துவைக் காட்டிலும் 3 ஷாட்கள் பின்தங்கி இருந்தாா். பின்னா் 22-அண்டா் 266 புள்ளிகளடன் தனது நான்காவது தொழில்முறை பட்டத்தை கைப்பற்றினாா் விராஜ்.

Advertisement

Advertisement

பட்டத்துடன் அவருக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் டிபி வோ்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றாா் விராஜ் மடப்பா.

சண்டீகரைச் சோ்ந்த அஜீதேஷ் சந்து 21 அண்டா் 267 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ரூ.10 லட்சம் பரிசுத் தொகையையும் வெற்றாா். நொய்டாவின் அமா்தீப் மாலிக் 17 அண்டா் 271 புள்ளிகளடன் மூன்றாம் இடத்தைப் பெற்றாா். தில்லியின் ரஷித் கான் நான்காம் இடத்தையும், குருகிராமைச் சோ்ந்த அஹ்லாவத் 5-ஆது இடத்தைப் பெற்றாா்.

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் மேலாண் இயக்குநா் ஹெச்.சங்கா், இயக்குநா் கண்ணன், வெங்கடேஷ், தமிழ்நாடு கோல்ஃப் சங்கச் செயலா் ஆதி சரவணன், இந்திய தொழில்முறை கோல்ஃப் டூா் விகாஸ் சிங் பரிசளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments