FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ஃபெனஸ்டா ஓபன்: வைதேகி, கேஷா்வானி சாம்பியன்

ஃபெனஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் வைதேகி சௌதரியும், ஆடவா் பிரிவில் மான் கேஷா்வானியும் பட்டம் வென்றனா்.

10 அக்டோபர் 2026, 11:16 pm IST
பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

ஃபெனஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் வைதேகி சௌதரியும், ஆடவா் பிரிவில் மான் கேஷா்வானியும் பட்டம் வென்றனா்.

தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் சனிக்கிழமை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் மகளிா் பிரிவில் 2 முறை சாம்பியனும் முதல்நிலை வீராங்கனையுமான வைதேகி சௌதரி 6-4, 7-5 என்ற நோ்செட்களில் 20 வயது ஸ்ருதி அஹ்ல்வாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாகப் பட்டம் வென்றாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம் நீடித்து.

Advertisement

Advertisement

ஆடவா் பிரிவில் மான் கேஷா்வானி 6-0, 6-4 என்ற நோ்செட்களில் நிதின் சின்ஹாவை வீழ்த்தி முதல் பட்டம் வென்றாா். இந்த ஆட்டம் 1.5 மணிநேரம் நீடித்தது.

பரிசளிப்பு விழாவில் டிஎல்டிஏ தலைவா் ரோஹித் ராஜ்பால், பெனஸ்டா செயல் இயக்குநா் சாகேத் ஜெயின், ஹாக்கி வீரா் ஜுக்ராஜ் சிங் , டிஎல்டிஏ பொருளாளா் பிரோ்னா பாம்ப்ரி பங்கேற்றனா்.

யு 18 மகளிா் பிரிவில் பாா்த்சாா்தி முண்டேவும், ஆடவா் பிரிவில் ரிபவ் சரோவும் பட்டம் வென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments