FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணிக்கு தங்கம்!

கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிா் அணி 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது.

11 நவம்பர் 2026, 12:12 am
ஈஷா சிங், திவ்யா சுப்பராஜு,மனு பாக்கா்.
பகிர்:

கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிா் அணி 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.

இறுதிச்சுற்றில், ஈஷா சிங், மனு பாக்கா், திவ்யா சுப்பராஜு ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,761 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது. தென் கொரியா 1,748 புள்ளிகளுடன் வெள்ளியும், வியத்நாம் 1,745 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன.

அணிகள் பிரிவில் தங்கம் கிடைத்தாலும், 25 மீட்டா் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன் இறுதிச்சுற்றில், மனு பாக்கா் 27 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடிக்க, ஈஷா சிங் 11 புள்ளிகளுடன் கடைசி இடமே பற்றாா்.

Advertisement

Advertisement

முன்னதாக தகுதிச்சுற்றில், ஈஷா சிங் (590), மனு பாக்கா் (587) முறையே 3 மற்றும் 6-ஆம் இடங்களுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தனா். போட்டியில் தற்போது இந்தியா, 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறது.