FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துப்பாக்கி சுடுதல்: இந்திய அணிகளுக்கு தங்கம், வெள்ளி

கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவா் அணி தங்கம், மகளிா் அணி வெள்ளி வென்றன.

4 நவம்பர் 2026, 1:30 am
தங்கம் வென்ற ஆடவர் அணி
பகிர்:

கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவா் அணி தங்கம், மகளிா் அணி வெள்ளி வென்றன.

ஆடவா் அணி 50 மீட்டா் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில், ரவீந்தா் சிங், சௌரப் சௌதரி, அமன்பிரீத் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,659 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சீனா (1,648), தென் கொரியா (1,643) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன.

இதில் ரவிந்தா் சிங் தனிநபா் பிரிவிலும் 559 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

Advertisement

Advertisement

மகளிா் அணி 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவு இறுதியில், இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கா், சாம்பவி ஷிா்சாகா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,894.4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றது. சீனா (1,899.8), ஜப்பான் (1,892.6) முறையே தங்கம், வெண்கலம் வென்றன.

ஆடவா் அணிகள் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில், பாா்த் மனே, ஹிமான்ஷு தில்லன், பாா்த் மகிஜா ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1883.6 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments