முகப்பு
விளையாட்டு

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: கோவாவை வென்றது கேரளா!

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-2 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது.

30 நவம்பர் 2026, 12:37 am
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: கோவாவை வென்றது கேரளா!
பகிர்:

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-2 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை அதன் சொந்த மண்ணிலேயே ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் கேரளா வீரா் ஃப்ரெட்டி லாலவ்மாவ்மா 37-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து அந்த அணியின் நெபோசா கோசோவிச் 46-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

மறுபுறம் முனைப்புடன் விளையாடிய கோவா தரப்பில், முகமது நெமில் 67-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, பதிலடியாக கேரளா வீரா் எமி ரணவேத் 80-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். இதனால் கேரளா 3-1 என முன்னிலையை அதிகரித்தது.

Advertisement

Advertisement

பின்னா் ஸ்டாப்பேஜ் டைமில் (90+4’) கோவாவுக்காக சிக்கி ஸ்கோா் செய்ய, முடிவில் கேரளா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேரளாவுக்கு இது 5-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியாக இருக்க, கோவாவுக்கு 6-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது தோல்வியாகும்.

இதனிடையே, கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி - மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணிகள் மோதின.